உலகின் சக்தி வாய்ந்த பேட்ஸ்மேன் தோனி.. ஒரு வருஷமா பேட்டை தொடல ஆனா.. தோனி குறித்து லட்சுமிபதி பாலாஜி

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இறுதி கட்டத்தில் அதிரடியாக விளையாடி வரும் மகேந்திர சிங் தோனி குறித்து முன்னாள் சிஎஸ்கே வீரரும், பந்துவீச்சு பயிற்சியாளருமான லக்ஷ்மிபதி பாலாஜி தோனி குறித்து ஒரு அதிரடியான கருத்தை கூறி இருக்கிறார்.

- Advertisement -

மகேந்திர சிங் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிகரமான கேப்டன் ஆக திகழ்ந்தவர். அவர் கேப்டனாக பதவி ஏற்றது முதல் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐந்து ஐபிஎல் பட்டங்களை வென்று கொடுத்துள்ளார். அவரது தலைமையில் கடைசியாக கடந்த வருடம் சிஎஸ்கே சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

- Advertisement -

அத்துடன் இந்த ஆண்டு தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே தனது கேப்டன்சியை இளம் வீரர் ருத்ராஜிடம் ஒப்படைத்து தற்போது ஒரு பினிஷர் ஆகவே ஆடிக் கொண்டு வருகிறார். கடந்த ஆண்டு ஏற்பட்ட முழங்கால் காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வெடுத்து வந்த தோனி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார்.

- Advertisement -

ஒவ்வொரு போட்டியிலும் கடைசி இரண்டு ஓவர்கள் அல்லது ஒரு ஓவரில் களமிறங்கி பௌண்டரிகளையும், சிக்சர்களையும் விளாசிக் கொண்டிருக்கிறார். 2024ஆம் ஆண்டில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள மகேந்திர சிங் தோனி 260 பேட்டிங் ஸ்ட்ரைக் ரைட்டில் 91 ஆண்டு குவித்துள்ளார். இதுவரை தோனி 8 பவுண்டரிகளையும், எட்டு சிக்ஸர்களையும் விளாசியுள்ளார்.

இந்த ஐபிஎல் தொடரில் குறைந்தது 30 பந்துகள் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளவர் மகேந்திர சிங் தோனி மட்டுமே. எனவே இது குறித்து லட்சுமிபதி பாலாஜி கூறும் பொழுது
“இந்த ஆண்டு தோனி வலை பயிற்சிக்கு முன்பு பேட்டை தொட்டு கூட பார்க்கவில்லை. அவர் இதற்கு முன்னர் எந்த கிரிக்கெட் தொடரிலும் விளையாடவில்லை. ஆனாலும் தன்னை ஐபிஎல் தொடருக்காக சிறப்பாக தயார்படுத்தி இருக்கிறார். நீண்ட நேரம் வலை பயிற்சி செய்கிறார். அதிரடியாக விளையாடுவது அவரின் முக்கிய பயிற்சியாக உள்ளது.

- Advertisement -

கடந்த சில ஆண்டுகளாக பார்க்கும் போது மகேந்திர சிங் தோனி மிகவும் சக்தி வாய்ந்த பேட்ஸ்மேனாக மாறி வருகிறார். உலகிலேயே அதிக சக்தி வாய்ந்த அதிரடி பேட்ஸ்மேன் ஆக மாறி இருக்கிறார். தற்போது இவர் இருக்கும் பார்மில் எந்த பேட்ஸ்மேனும் அருகில் கூட வர முடியாது” என்று கூறியிருக்கிறார். மகேந்திர சிங் தோனிக்கு இந்த தொடரே கடைசியாக இருக்குமா? என்று தெரியவில்லை. ஆனால் இந்த சீசனில் சில அபாரமான ஷாட்களை விளையாடி வருகிறார்.

இதையும் படிங்க:2024 டி20 உலக கோப்பையில் யுவராஜ் சிங்.. சாதனை நாயகனுக்கு கிடைத்த கௌரவம்.. முழு விவரம்

கிரிக்கெட்டில் வந்த புதிதில் மகேந்திர சிங் தோனி வந்த போது ஸ்கூப் ஷாட், ரிவர் ஸ்வீப் போன்ற ஷாட்களை விளையாடினார். ஆனால் தோனி கேப்டனான பிறகு அது போன்ற ஷாட்களை பெரிதாக விளையாடுவதில்லை. ஆனால் தற்போது லக்னோ அணிக்கு எதிராக அவர் அடித்த ஸ்கூப் ஷாட் சிக்ஸர் தற்போது ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles