ஆர்சிபிக்காக நான் இதை செய்யணும்.. இந்த ஒரு விஷயம்தான் எனக்கு ஊக்கத்தை கொடுத்தது – குருனால் பாண்டியா பேட்டி

18வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் தொடர் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ள நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கியது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் லக்னோ அணியில் இருந்து தற்போது பெங்களூர் அணிக்காக விளையாட காத்திருக்கும் குருனால் பாண்டியா பெங்களூர் அணி குறித்து சில கருத்துக்களை கூறுகிறார்.

- Advertisement -

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை ஒரு ஐபிஎல் கோப்பையை கூட வெற்றி பெறாத நிலையில் கடந்த ஐபிஎல் தொடரில் முதல் பாதியில் மோசமாக செயல்பட்டது. இருப்பினும் தங்களிடமிருந்த வீரர்களைக் கொண்டு இரண்டாவது பாதியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு ப்ளே ஆப் சுற்று வரை முன்னேறியது. இந்த சூழ்நிலையில் அணியை பலப்படுத்தும் விதமாக நடைபெற்று முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் அணிக்குத் தகுந்த வீரர்களை வாங்கி வலுவாக கட்டமைத்தது.

- Advertisement -

இதில் இதுவரை மும்பை மற்றும் லக்னோ அணிகளுக்காக ஐபிஎல் தொடரில் விளையாடிய ஹர்திக் பாண்டியாவின் சகோதரரான குருனால் பாண்டியாவை பெங்களூர் அணி 5 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு இவரை வாங்கியது. ராஜஸ்தான் அணிக்கும் பெங்களூர் அணிக்கும் ஏற்பட்ட மோதலில் பெங்களூர் அணியே கடைசியில் வெற்றி பெற்று இவரை வாங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் பெங்களூர் அணி குறித்து தற்போது குருனால் பாண்டியா சிலர் முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “நம் அனைவருக்கும் விராட் கோலி யார் என்றும், அவர் இதுவரை என்ன செய்திருக்கிறார் என்றும் நன்றாகவே தெரியும். வெற்றி பெறுவதற்காக அவர் களத்தில் வெளிப்படுத்தும் ஆக்ரோஷம் எனக்கு மிகவும் பிடிக்கும். கிரிக்கெட் மீது கொண்டிருக்கும் அன்பு, காதல் எனக்கு மிகவும் பிடிக்கும். எப்போதும் வெற்றி பெறவேண்டிய எண்ணம் அவருக்கு அதிகமாக இருக்கும் நிலையில் அவரைப் போலவே எனக்கும் அந்த எண்ணம் உள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க:ரோஹித் செஞ்ச தப்புக்கு.. ஆஸி கேப்டன் இப்போ மகிழ்ச்சியா இருப்பாரு – மைக்கேல் வாகன் பேட்டி

பெங்களூர் அணிக்காக இந்த முறை விளையாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதுவரை கோப்பையை வெல்லாத ஒரு அணிக்காக விளையாடி கோப்பையை வெல்ல வேண்டும் என்பது எனது ஆசை. ஆர்சிபி இதுவரை ஒரு கோப்பையை கூட வெல்லாத அணி என்பதுதான் எனக்கு ஊக்கத்தையும் உத்வேகத்தையும் அளிக்கிறது. நிச்சயம் ஆர்சிபி ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே எனது ஆசை. அணியுடன் இணையும் அந்த தருணத்திற்காக நான் காத்திருக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles