இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நிலையில் மூன்றாவது போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு முடிவுக்கு வந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தவறு செய்து விட்டதாக சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்து இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கபா மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில் டாஸ் ஜெய்த்த ரோகித் சர்மா முதலில் பந்து வீச தீர்மானித்தார்.
ஏனென்றால் இந்த ஆடுகளத்தில் இதற்கு முன்னர் நடைபெற்ற போட்டிகளில் டாஸ் ஜெயித்து பந்து வீச்சை தேர்ந்தெடுத்த அணிகள் பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளன. எனவே அந்த அடிப்படையில் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்ய முதல் நாள் ஆட்டம் 13 ஓவர்கள் வீசப்பட்டு விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் அடித்த பிறகு முடிவுக்கு வந்துள்ளது. இந்த சூழ்நிலையில் ரோஹித் சர்மா டாஸ் ஜெயித்து தவறு செய்து விட்டதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “டாஸ் தோற்ற ஆஸ்திரேலியா அணியின் பேட் கம்மின்ஸ் மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்று நினைக்கிறேன். ஏனென்றால் டாஸ் ஜெயித்து முடிவெடுக்க வேண்டிய நிலையில் அவர் இல்லை. இந்த மைதானத்தில் புள்ளி விவரங்களை கணித்து ரோகித் சர்மா பந்து வீச தீர்மானித்திருக்கலாம். ஆனால் தற்போது இந்த ஆடுகளத்தில் பந்துவீச்சுக்கு உதவக்கூடிய சூழ்நிலைகள் இருப்பதாக தெரியவில்லை.
இதையும் படிங்க:ஆஸி கேப்டன் கம்மின்ஸ் பேசுறது நியாயமே இல்ல.. இந்த விஷயத்தை தப்பா புரிஞ்சு இருக்காரு – சுப்மான் கில் பேட்டி
இதனால் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் மகிழ்ச்சியடைந்து இருப்பார்”என்று கூறி இருக்கிறார். மேலும் இதுகுறித்து ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் பிரண்டன் ஜூலியட் கூறும் போது “இங்கு முன்பிருந்தே மழை பெய்து வருகிறது. வீரர்கள் பயிற்சிக்கு வந்த போது ஆடுகளம் நல்ல பச்சையாக இருந்தது. ஆனால் போட்டி தொடங்கப்பட்ட நாளில் ஆடுகளம் அவ்வளவு பச்சையாக இல்லை. இதனால் டாஸ் வென்று பேட்டிங் தேர்ந்தெடுத்து இருப்பதே நல்ல முடிவாகும் என்று நினைக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.

