இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை காலை பிரிஸ்பேனில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் இரண்டு அணி வீரர்களும் தற்போது பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணி வீரர் பேட் கம்மின்ஸ் குறித்து இந்திய கிரிக்கெட் வீரரான சுப்மான் கில் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் சுதாரித்துக் கொண்ட ஆஸ்திரேலிய அணி அடுத்த டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்களுக்கு தகுந்த முறையில் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தியது. இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலை வகிக்கிறது.
இந்த சூழ்நிலையில் அடுத்த டெஸ்ட் போட்டி குறித்து பேசிய ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் அடுத்த போட்டியில் இந்திய வீரர்களுக்கு ஷாட் பிட்ச் பந்துகளை வீசி நெருக்கடி கொடுக்கப் போவதாக பத்திரிகையாளர் சந்திப்பில் பேசி இருந்தார். இந்த சூழ்நிலையில் அது குறித்து பேசிய இந்திய அணி கிரிக்கெட் வீரர் சுப்மான் கில் ஷாட் பிட்ச் பந்துகளை எதிர்கொள்வது குறித்து இந்திய அணி தரப்பில் சில முக்கியமான கருத்துகளை பேசியிருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “பேட் கம்மின்ஸ் ஷார்ட் பந்தில் ஒரு பேட்ஸ்மேன் விக்கெட் மட்டுமே கைப்பற்றி இருந்தார். அதற்குப் பிறகு அவர் கைப்பற்றிய விக்கெட்டுகள் அனைத்துமே கீழ் வரிசையில் பேட்டிங் செய்யக்கூடிய பந்துவீச்சாளர்கள் தான். அதனால் அவர் ஷார்ட் பால் பந்துகளின் திட்டம் குறித்து என்ன பேசுகிறார் என்று புரியவில்லை. மேலும் நான் தற்போது ஆஸ்திரேலியாவில் நல்ல முறையிலேயே உணர்கிறேன்.
இதையும் படிங்க:ரோகித் இடத்தில் நான் இருந்தா.. கவலையே இல்லாம இந்த விஷயத்தை செஞ்சு இருப்பேன் – ஆஸி ரிக்கி பாண்டிங் பேட்டி
ஆரம்பத்தில் எனக்கு சில பிரச்சனைகள் இருந்தது. ஆனால் தற்போது அது சரி செய்யப்பட்டு விட்டதாக உணர்கிறேன். இரண்டாவது போட்டியில் ஒரு புல்லர் லென்த் பாலை தவறவிட்டேன். மேலும் பிங்க் பந்து பொருத்தவரையில் கையில் இருந்து வெளியே வரும் போது என்னுடைய கணிப்பில் சில தவறுகள் இருந்தது. இருப்பினும் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று பேசி இருக்கிறார்.

