சிஎஸ்கே ஒரு விஷயத்தை கவனிக்காமல் விட்டு இப்ப பெரிய தப்பு பண்ணிட்டாங்க.. மத்த டீமை பார்த்தா இவங்க கண்டிப்பா மாட்டுவாங்க – ஸ்ரீகாந்த் பேட்டி

நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு பெரிய தவறை செய்துவிட்டதாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் கூறும் போது “சிஎஸ்கே முஸ்தபிஷர் ரகுமானை வாங்கியிருக்க வேண்டும். நீங்கள் பதிரானாவை வெளியிட முடிவு செய்ததுமே உங்களுக்கு இறுதி கட்ட ஓவர்கள் வீசுவதற்கு ஒரு ஆள் தேவை. தற்போது சிஎஸ்கே அணிக்கு டெத் பவுலர் இல்லை.

- Advertisement -

கார்த்திக் சர்மா மற்றும் ஜடேஜாவுக்கு பதிலாக எடுக்கப்பட்ட பிரசாந்த் வீர் இருவருமே ஒரே பிளேயிங் 11 இல் விளையாட முடியாது. இதனால் அகில் ஹுசைன் விளையாட வேண்டும் என்று நான் கூறுவேன். நீங்கள் முழுமையாக நூர் அகமதுவை மட்டுமே நம்பி இருக்க முடியாது. மேலும் பிரசாந்த் நமக்கு எப்படி யூஸ் ஆவார் என்பது தெரியாது. சிஎஸ்கே தற்போது இளைஞர்களை நோக்கி குறி வைக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. மேலும் இந்த ஏலத்தில் ராகுல் சகாரை வாங்கி இருக்கிறார்கள்.

- Advertisement -

அவர் சற்று கோபப்படக்கூடிய வீரர் என்று சொல்லப்படுகிறது. அதெல்லாம் எனக்கு ஒன்றும் பிரச்சனை கிடையாது. எனக்கு இந்த இடத்தில் நூர் அகமது, அகேல் ஹுசேன் மற்றும் ராகுல் சகார் மூன்று பேரும் விளையாடினால் வேகப்பந்து வீச்சுக்கு நான்காவது சிவம் துபேவை பயன்படுத்துவேன்” என்று பேசி இருக்கிறார்

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles