கொஞ்சம் பவுன்ஸ் இருக்கு மச்சி… ஸ்டம்ப் மைக்கில் பதிவான தமிழ்.. சாய் சுதர்சனிடம் பேசிய கேஎல் ராகுல்

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹெடிங்லே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய வீரர்களின் மோசமான ஃபீல்டிங் காரணமாக 465 ரன்களை எடுத்து அசத்தியது. இந்திய அணி தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

கேஎல் ராகுல் – சாய் சுதர்சன்

இதனால் 6 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2வது இன்னிங்ஸை நேற்று தொடங்கியது. இதில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, கேஎல் ராகுல் – சாய் சுதர்சன் இணை நிதானமாக ரன்களை சேர்த்தது. கேஎல் ராகுல் தனது பாணியில் ஸ்டைலிஷாக பவுண்டரிகளை கவர்ஸ் திசையில் விளாசி ரன்களை சேர்த்தார்.

- Advertisement -

அதேபோல் சாய் சுதர்சன் தனது ஸ்டைலில் லேட்டாக பந்தை விளையாடி ரன்களை சேர்த்தார். இதன் காரணமாக 12வது ஓவருக்கு பின்னரே இங்கிலாந்து அணி ஸ்பின்னரான சோயப் பஷீரை அட்டாக்கில் கொண்டு வந்தது. இதில் பஷீர் வீசிய 2வது பந்திலேயே நன்றாக பவுன்ஸ் எழும்ப, அதனை கேஎல் ராகுல் லாவகமாக பவுண்டரி அடித்தார்.

- Advertisement -

ஸ்டம்ப் மைக்கில் தமிழ்

உடனடியாக கேஎல் ராகுல், எதிர் முனையில் நின்றிருந்த சாய் சுதர்சனிடம், “கொஞ்சம் பவுன்ஸ் இருக்கு மச்சி” என்று எச்சரிக்கை செய்தார். வழக்கமாக இந்தியில் தான் இந்திய அணி வீரர்கள் உரையாடுவார்கள். எப்போதாவது தினேஷ் கார்த்திக், வருண் சக்கரவர்த்தி, அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், நடராஜன், மயங்க் அகர்வால், சஞ்சு சாம்சன் உள்ளிட்டோர் இருக்கும் போது தமிழில் பேசுவார்கள்.

இந்த நிலையில் நேற்று கர்நாடகாவைச் சேர்ந்த கேஎல் ராகுல், தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் சுதர்சன் இணைந்து ஆடிய போது, தமிழில் உரையாடியது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியது. நீண்ட இடைவெளிக்கு பின் ஸ்டம்ப் மைக்கில் தமிழில் இந்திய வீரர்களின் பேச்சை கேட்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles