2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ளது. ஏற்கனவே இதற்கான பயிற்சி முகாம்களை அந்தந்த அணி நிர்வாகங்கள் தொடங்கிவிட்டன. இம்முறை டெல்லி அணி புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. பயிற்சியாளராக இருந்த ரிக்கி பாண்டிங் நீக்கப்பட்டு அவரது இடத்தில் ஹேமங் பதானி மற்றும் வேணுகோபால் ராவ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
அதேபோல் கேப்டன் ரிஷப் பண்ட் விடுவிக்கப்பட்டு, புதிய கேப்டனுக்கான தேடலில் அந்த அணி நிர்வாகம் உள்ளது. இருந்தாலும் கேஎல் ராகுலை ரூ.14 கோடிக்கும், மிட்சல் ஸ்டார்க்கை ரூ.11.75 கோடிக்கும் டெல்லி அணி நிர்வாகம் வாங்கியுள்ளது. அதேபோல் நடராஜன், குல்தீப் யாதவ், அக்சர் படேல் என்று தரமான வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.
கேஎல் ராகுல் மாஸ்
இதனால் டெல்லி அணியின் நீண்ட நாள் கனவான சாம்பியன்ஷிப்பை இம்முறை கைபற்ற தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் டெல்லி அணியுடன் இணைவது தொடர்பாக மிட்சல் ஸ்டார்க் பேசும் போது, இந்திய அணியின் மிஸ்டர் ஃபிக்சிட் யாரென்றால் அது கேஎல் ராகுல்தான். தொடக்க வீரர், நம்பர் 6, ஃபீல்டிங், விக்கெட் கீப்பிங், ஃபினிஷிங் என்று எந்த ரோல் கொடுத்தாலும் அசத்தலாக விளையாடி வருகிறார்.
அதனால் டெல்லி அணியில் கேஎல் ராகுலுடன் விளையாடுவதை எதிர்நோக்கியுள்ளேன். இந்திய அணியின் பலமும், அவர்காளின் பெஞ்ச் வலிமையும் அதிசயிக்க வைக்கிறது. ஏனென்றால் இந்திய அணியால் மட்டுமே ஒரே நேரத்தில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என்று 3 தரமான அணிகளை ஒரே நாளில் விளையாட வைக்கும் அளவிற்கு உச்சத்தில் உள்ளது.
இந்திய அணி
அவர்களால் ஒரே நேரத்தில் ஆஸ்திரேலியா அணியுடன் டெஸ்ட் போட்டியிலும், இங்கிலாந்து அணியுடன் ஒருநாள் போட்டிகளிலும்,. தென்னாப்பிரிக்காவுடன் டி20 போட்டிகளிலும் விளையாட் அமுடியும். அதுவும் 3 அணிகளுக்கும் சவால் அளிக்கும் வகையில் விளையாடுவார்கள். இதனை வேறு எந்த நாட்டு கிரிக்கெட் அணியாலும் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு கொல்கத்தா அணிக்காக சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த மிட்சல் ஸ்டார்க், இம்முறை டெல்லி அணிக்காக செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின் நீண்ட ஓய்வில் இருந்த மிட்சல் ஸ்டார்க் நேரடியாக ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

