பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி துவங்கிய இந்த போட்டிகளில் இதுவரை இரண்டு ஆட்டங்கள் முடிவு பெற்று இருக்கின்றன. அவற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் நேபாள் மற்றும் பங்களாதேஷ் அணிகளை வீழ்த்தி இருக்கிறது.
அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய இந்த தொடரின் மூன்றாவது போட்டி நாளை இலங்கையில் உள்ள கண்டி நகரில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பல புரட்சி நடத்த இருக்கின்றன. கடந்த ஆசிய கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரண்டு போட்டிகளில் மோதின. அதில் இந்தியா ஒரு போட்டியிலும் பாகிஸ்தான் ஒரு போட்டியிலும் வெற்றி பெற்று இருக்கிறது. மேலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக கோப்பை டி20 போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது.
இதனால் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சிகர்களிடையே அதிகரித்து இருக்கிறது. மேலும் அங்கு என்பது சதவீதம் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு அறிக்கை தெரிவித்தாலும் போட்டி நடைபெறும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.இந்நிலையில் ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து விலகி இருந்த கேஎல் ராகுல் கடந்த ஒரு மாத காலமாக தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வந்தார்.
மேலும் அவர் ஆசிய கோப்பைக்காக நடத்தப்பட்ட சிறப்பு பயிற்சி முகாமிலும் கலந்து கொண்டார் . பயிற்சி போட்டியிலும் நன்றாக பேட்டிங் செய்தார். எனினும் அவர் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடமாட்டார் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்திருந்தார். இதனால் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என பலரும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் சஞ்சு சம்சனால் இந்தத் தொடரில் விளையாட முடியாது என்பதற்கான காரணம் தற்போது வெளியாகியிருக்கிறது.
ஆசிய கோப்பை காண 17 பேர் கொண்ட இந்திய அணி தேர்ந்தெடுக்கப்பட்டபோது சஞ்சு சாம்சன் மாற்று வீரராக தான் அணியில் இடம் பெற்றிருந்தார். அவர் ஆசிய கோப்பை காண 17 பேர் கொண்ட அணியில் இடம் பெறவில்லை. காயம் காரணமாக ஏதாவது ஒரு வீரர் உலக நேரிட்டால் அவருக்கு மாற்று வீரராகவே இந்திய அணியோடு பயணம் மேற்கொண்டு இருக்கிறார். தற்போது முதல் இரண்டு போட்டிகளில் கே எல் ராகுல் விளையாடவில்லை என்றாலும் சஞ்சு சாம்சன் ஆல் இந்திய அணியில் விளையாட முடியாது.
கேஎல் ராகுல் ஆசியக் கோப்பை தொடரிலிருந்து முற்றிலுமாக விலகி அவருக்கு பதிலாக 17 பேர் கொண்ட ஆசிய கோப்பை காண இந்திய அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்ட பிறகு தான் அவர் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெறுவார் . அதற்கு முன்பு வரை பேக் அப் வீரராக தான் அவர் செயல்பட முடியும். இதன் காரணமாக நாளை நடைபெற இருக்கும் போட்டியில் இஷான் கிசான் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்று இந்திய நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
ஆசிய கோப்பை 17 பேர் கொண்ட அணியில் கேஎல் ராகுல் மற்றும் இசான்கிஷான் ஆகிய இருவர் மட்டுமே விக்கெட் கீப்பர்கள். தற்போது கே எல் ராகுல் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாததால் அந்த இரண்டு போட்டிகளிலும் இஷான் கிஷான் விக்கெட் கீப்பராக செயல்படுவார். நான்காம் தேதிக்குப் பிறகு கே எல் ராகுல் இந்த தொடரில் பங்கேற்பாரா இல்லையா என்பது தெரிந்துவிடும். அவர் பங்கேற்கவில்லை என்றால் மட்டும்தான் சஞ்சு சாம்சன் ஆசிய கோப்பை காண 17 பேர் கொண்ட அணியில் இடம் பெற்று விளையாடுவதற்கு தகுதி பெற முடியும் .

