கேஎல் ராகுல் வருகை.. நாட்டிற்கு அனுப்பப்பட்ட நட்சத்திர வீரர்.. ஆசிய கோப்பை இந்திய அணியில் அதிரடி மாற்றம்.!

16 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் வைத்து ஹைபிரிட் முறையில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி தொடரில் நான்கு ஆட்டங்கள் பாகிஸ்தானிலும் ஒன்பது ஆட்டங்கள் இலங்கையிலும் வைத்து நடைபெற உள்ளன. இதில் பாகிஸ்தானில் நான்கு ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் மீதமுள்ள ஆட்டங்கள் இலங்கை தலைநகரான கொழும்பில் வைத்து நடைபெற இருக்கிறது.

- Advertisement -

முதல் சுற்று போட்டிகளின் முடிவில் இந்தியா பாகிஸ்தான் மற்றும் இலங்கை பங்களாதேஷ் அணிகள் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த சூப்பர் ஃபோர் சுப்ரீம் முதல் ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியை பாகிஸ்தான் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்நிலையில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது சூப்பர் 4 போட்டி இன்று மதியம் கொழும்பில் வைத்து நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணி சூப்பர் ஃபோர் சுற்றின் முதல் போட்டியில் நாளை பாகிஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது. ஏற்கனவே முதல் சுற்று போட்டியில் நடைபெற இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சூப்பர் போர் சுற்று போட்டிக்கு ரிசர்வ் டே அறிவித்துள்ளது ஆசிய கிரிக்கெட் கவுன்சில்.

- Advertisement -

இந்திய அணியின் முதல் தேர்வு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மன்னான கேஎல் ராகுல் இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் பங்கேற்கவில்லை. ஐபிஎல் போட்டிகளின் போது ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வந்த அவர் சூப்பர் ஃபோர் சுற்றின் முதல் போட்டிக்கு முன்பாக இந்திய அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அவருக்கு பதில் இந்திய அணியில் பேக் அப் வீரராக சேர்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு நாடு திரும்பி இருக்கிறார்.

ஆசிய கோப்பை போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக 17 பேர் கொண்ட அணியில் கேஎல் ராகுல் அறிவிக்கப்பட்டிருந்தார். இந்திய அணியின் பயிற்சி முகாமின் போது அவருக்கு சிறிய தசை பிடிப்பு ஏற்பட்டதால் முதல் இரண்டு போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து என்சிஏ-வில் பயிற்சி பெற்று வந்த கே எல் ராகுல் தன்னுடைய காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து தற்போது இந்திய அணியுடன் இணைந்து இருக்கிறார்.

- Advertisement -

கே.எல். ராகுல் காயம் காரணமாக அணியிலிருந்து வெளியேறிய போது அவருக்கு பதிலாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பணியை செய்து வந்த இஷான் கிஷான் கடைசியாக விளையாடிய நான்கு போட்டிகளிலும் தொடர்ச்சியாக நான்கு அரை சதங்கள் எடுத்து நல்ல பார்மில் இருக்கிறார். மேலும் பாகிஸ்தான் அணியுடன் ஆன முதல் சுற்று போட்டியில் இந்தியா நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தபோது மிகச் சிறப்பாக ஆடி 82 ரன்கள் எடுத்து அணியை சரிவிலிருந்து மீட்டார். இதனால் கேஎல் ராகுல் அணிக்கு திரும்பினாலும் அவருக்கு வாய்ப்பளிக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.

இது தொடர்பாக பல்வேறு விவாதங்களும் சர்ச்சைகளும் எழுந்து வந்த நிலையில் நாளை நடைபெறும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தக் கேள்விகளுக்கான விடை கிடைக்கும். இந்திய நிர்வாகம் கேஎல் ராகுலை அணியில் தேர்வு செய்யுமா அல்லது இஷான் கிசானோடு தொடருமா என்பது நாளை தெரியவரும். ஆசிய கோப்பை காண 17 பேர் கொண்ட அணியில் கேஎல் ராகுல் இடம் பெற்று இருந்தார். அவருக்கு மாற்று வீரராக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் பேக் அப் வீரராக சேர்க்கப்பட்டார். ஒருவேளை கே எல் ராகுல் காயத்திலிருந்து மீண்டு வரவில்லை என்றால் அவருக்கு பதிலாக மெயின் அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெற்றிருப்பார். தற்போது கேஎல் ராகுல் இந்திய அணியுடன் இணைந்து இருப்பதால் சஞ்சு சாம்சன் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு இந்தியா திரும்புகிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles