ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 2வது வாரத்தில் அபுதாபியில் நடக்க உள்ளது. அதற்கு முன்பாக நவம்பர் 15ஆம் தேதி மாலை 6 மணிக்குள் ஒவ்வொரு அணியும் தங்களால் ரீடெய்ன் செய்த வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். அதற்கு முன்பாக சில அணிகள் டிரேட் செய்ய முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
கடந்த சீசனில் கேகேஆர் மோசமான தோல்வியை பெற்றதால், இம்முறை அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. அதிகம் நம்பிய நட்சத்திர வீரர் வெங்கடேஷ் ஐயர் ரூ.23.75 கோடிக்கு வாங்கப்பட்ட போதும், அவரால் சோபிக்க முடியவில்லை. ஃபார்மின்றி தவித்ததால் கடைசி சில போட்டிகளில் வெங்கடேஷ் ஐயர் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார்.
இதனால் இந்த ஏலத்தில் கேகேஆர் அணி வெங்கடேஷ் ஐயரை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது. அதேபோல் ரஸ்ஸல் அல்லது அதிக விலைக்கு வாங்கப்பட்ட சில வீரர்களையும் ரிலீஸ் செய்துவிடலாம் என்று முடிவு செய்துள்ளது. இதனால் ஐபிஎல் மினி ஏலத்தில் ரூ,.40 கோடி பர்ஸ் தொகையுடன் களமிறங்க கேகேஆர் அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

