ஐபிஎல் 2025 இன்று கொல்கத்தா நகரில் துவங்கியது. இந்த வருடம் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் கொல்கத்தா அணியை அதன் சொந்த மண்ணில் பெங்களூரு அணி எதிர்கொண்டது. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 174 ரன்கள் எடுத்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மிடில் ஆர்டர் சொதப்பியதால் இறுதி கட்டத்தில் அணியால் ரன்களை குவிக்க முடியவில்லை.
இதனை தொடர்ந்து களம் இறங்கிய பெங்களூரு அணி 17 வது ஓவரிலேயே 177 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. கேப்டன் ரஜத் படித்தார் அதிரடியாக 34 (16) ரன்கள் எடுத்து ஃபெவிலியன் திரும்பினார். இறுதியில் லிவிங்ஸ்டன் 15* (5), விராட் கோலி 59* (36) ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர். பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர் சால்ட் அரைசதம் அடித்தார். 2022 ஆம் ஆண்டிற்கு பிறகு கொல்கத்தா அணிக்கு எதிராக பெங்களூரு அணி பெறும் வெற்றி இது என்பது குறிப்பித்தக்கது.
போட்டிக்கு பிறகு அரை சதம் அடித்த கொல்கத்தா அணியின் கேப்டன் பேசும் போது ” 13வது ஓவர் வரை நாங்கள் நன்றாக விளையாடிகொண்டிருக்கின்றோம் என்று நினைத்தேன், ஆனால் 2-3 விக்கெட்டுகள் வேகத்தை மாற்றியது. அதைத் தொடர்ந்து வந்த பேட்டர்கள் தங்களால் இயன்றதைச் செய்தார்கள், ஆனால் அது எங்களுக்கு போதுமானதாக அமையவில்லை என்று பேசி இருந்தார்.
தொடர்ந்து பேசும் போது ” நானும் வெங்கியும் பேட்டிங் செய்யும்போது 200-210 ரன்களை எட்ட முடியும் என்று விவாதித்தோம், ஆனால் அந்த விக்கெட்டுகள் வேகத்தை மாற்றியது. கொஞ்சம் பனி இருந்தது, ஆனால் அவர்கள் பேட்டிங்கில் மிகச் சிறந்த பவர்பிளேயைக் கொண்டிருந்தனர். அது (மொத்தம்) சமமாக இருந்தது. நாங்கள் 200+ ரன்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். இந்த ஆட்டத்தைப் பற்றி நாங்கள் அதிகம் யோசிக்க விரும்பவில்லை, ஆனால் அதே நேரத்தில் சில பகுதிகளில் சிறப்பாகச் செயல்பட முயற்சிக்க உள்ளோம்” என்று பேசினார்.

