பிரசாந்த் வீரை வாங்க சொல்லி சொன்னதை அவங்க தான்.. நாங்க அவங்க சொன்னதைத்தான் செஞ்சோம் – சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் பேட்டி

நேற்று நடைபெற்ற முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கார்த்திக் ஷர்மா மற்றும் பிரசாந்த் வீர் இருவரையும் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுத்து ஆச்சரியப்படுத்தியது. ஒரு வீரருக்கு தலா 14.20 கோடி என 28 கோடி ரூபாய்க்கு எடுத்து சிஎஸ்கே அணியையே இளமைப் பட்டாளம் கொண்ட அணியாக மாற்றியது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இது குறித்து சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் பேசும்போது ” சிஎஸ்கே அணிக்கு முதலில் கேமரூன் கிரீனை தான் வாங்க வேண்டும் என்று நினைத்தோம். அப்படி வாங்கும் போது அவருக்காக 50 சதவீத தொகையை செலவு செய்ய நேரிடும். அப்படி நடந்தால் இளம் வீரர்களை அடையாளப்படுத்த முடியாது என்று நினைத்தோம். முன்பிருந்தே எங்கள் ஸ்கௌட்டிங் டீம் எந்த இந்திய இளம் வீரர்கள் நன்றாக விளையாடுகிறார்கள் என்று தெரிவித்துக் கொண்டே இருந்தார்கள்.

- Advertisement -

அதற்கு ஏற்றவாறு நாங்களும் அவர்களை வாங்க வேண்டும் என்று முன்பே திட்டமிட்டு இருந்தோம். இதனால் சிஎஸ்கே ரசிகர்களே, சந்தோசமாக இருங்கள் இந்த முறை நாம் கோப்பையை வெல்வோம் என்று நம்புகிறேன்” என்று அவர் பேசியிருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles