CSK க்கு புதிய கேப்டன் யார்?. தோனியே தெளிவா சொல்லிட்டாரு.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த காசி விஸ்வநாத்

இந்தியன் பிரீமியர் லீக் தொடக்க போட்டியில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோத உள்ளன. இதற்கான தொடக்க நிகழ்ச்சிகள் மிகப் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை அணியில் தோனிக்குப் பிறகு அடுத்த கேப்டனாக பதவி ஏற்க போவது யார்? என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் காசி விஸ்வநாத் பதில் அளித்துள்ளார்.

- Advertisement -

வருகிற 22 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி சில நாட்களுக்கு முன்பு தனது பயிற்சியைத் துவங்கினார்.

- Advertisement -

கடந்த சீசனில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடர் முழுவதுமே காயத்தையும் பொருட்படுத்தாது அணியின் நலனுக்காகவும், ரசிகர்களுக்காகவும் விளையாடினார். அதன் பின்னர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இந்த சீசனில் பங்கு பெறுவதற்காக மிகக் கடுமையாக உழைத்து உள்ளார். தற்போது அவரது உடல் தகுதியை பார்த்தாலே இது நன்கு புரியும். கடந்த சீசனில் பைனல் போட்டிக்கு பிறகு இன்னும் ஒரு சீசனில் ரசிகர்களுக்காக ஆடப்போவதாக விருப்பம் தெரிவித்தார்.

- Advertisement -

அவர் இன்னும் இரு சீசன்களில் விளையாடுவார் என்று தகவல்கள் வெளிவரும் நிலையில், கிட்டத்தட்ட இந்த சீசனோடு ஓய்வு பெற்று விடுவார் என்றே தெரிகிறது. அதற்குப் பிறகு சென்னை அணியின் ஆலோசராக செயல்பட போகிறாரா? அல்லது வேறு ஏதேனும் பதவி வைக்க போகிறாரா? என்பது குறித்து இன்னும் தகவல்கள் வெளிவரவில்லை.

எனவே இது குறித்து சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாத், சென்னை அணியின் அடுத்த கேப்டன் குறித்து எழுகின்ற கேள்விகளை ஏற்றுக் கொள்கிறார். இது குறித்து அவர் கூறுகையில்
“அணியின் அடுத்த கேப்டன் யார் என்பது குறித்த பேச்சு வார்த்தை எங்களுக்குள் நடைபெற்றது உண்மைதான். ஆனால் திரு. சீனிவாசன் அவர்கள் ‘இதுகுறித்து யாரும் பேச வேண்டாம். அணியின் கேப்டன், பயிற்சியாளரும் சேர்ந்து முடிவு செய்துவிட்டு என்னிடம் தெரிவிப்பார்கள். எனவே அதுவரை அமைதியாக இருப்போம்’ என்று பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

- Advertisement -

மேலும் தற்போது தொடரிலேயே அதிக கவனம் செலுத்த விரும்புகிறோம். நாக் அவுட் சுற்றுக்கு செல்வதே எங்கள் முதல் இலக்கு. அதற்கான பணிகளையே மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். மேலும் எம் எஸ் தோனி அவர்கள் எங்களிடம் ‘முதலில் நாக்கவுட் சுற்றுக்கு செல்வது தான் நமது முதல் இலக்கு.எனவே அதை நோக்கியே பயணிப்போம்’ என்று கூறுவார்.

அழுத்தம் எங்களுக்கு எப்போதும் உள்ளது. ஆனால் இது எங்களுக்கு பழகிய ஒன்று. எங்களது அணியின் நிலையான செயல்பாட்டின் காரணமாக நாங்கள் இதனை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை” என்று கூறி முடித்திருக்கிறார். எனவே வரும் முதல் போட்டியில் தோனியைக் காண சென்னை அணி ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles