டி20 உலக கோப்பை அப்போ.. ஹர்த்திக் ரோகித் பேசிக்கல.. பிரச்சனையைப் பேசி முடிவுக்கு கொண்டு வந்தது இவர்தான்.. பத்திரிக்கையாளர் தகவல்

இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்து தற்போது சில மாதங்கள் ஆகிறது. இந்த டி20 உலக கோப்பையை வெல்ல இந்திய அணியின் மூத்த வீரர்கள் முக்கிய பங்காற்றினர்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் தொடரின் ஆரம்பத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் பேசிக்கொள்ளவில்லை என்று சில தகவல்களை பத்திரிக்கையாளர் விமல் குமார் கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்ட போதிலிருந்தே ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கிடையே சிறிய பனிப்போர் நிலவுவதாக தெரிந்தது. ஏனென்றால் மும்பை அணியில் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை விலக்கிவிட்டு குஜராத் அணியில் கேப்டனாக செயல்பட்டுக் கொண்டிருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி கேப்டன் ஆக நியமித்தது. இது ரோகித் சர்மாவுக்கு பிடிக்கவில்லை என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

- Advertisement -

மேலும் டி20 உலக கோப்பையில் ஹர்திக் பாண்டியாவை துணை கேப்டனாக நியமித்ததில் ரோஹித் சர்மாவுக்கு மகிழ்ச்சி இல்லை என்றும் ஒரு தகவல் வெளிவந்த நிலையில், பயிற்சியின் முதல் நாளில் ரோகித் சர்மா மற்றும் ஹர்த்திக் பாண்டியா இருவரும் பேசிக் கொள்ளவில்லை என்றும் அடுத்த நாள் கேமரா இல்லாத ஒரு மூலையில் இருவரும் அமர்ந்து தங்கள் பிரச்சனைகளை பேசி சமரச முடிவுக்கு வந்திருக்கின்றனர் என்று இந்திய தரப்பில் பயணம் செய்த விமல் குமார் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து விமல் குமார் கூறும் போது “டி20 உலக கோப்பை முதல் நாள் பயிற்சியின் போது ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. அடுத்த நாள் நான் அவர்களை கவனித்த போது கேமரா இல்லாத ஒரு மூலையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது தங்கள் மனதில் ஏற்பட்ட கருத்துக்களை இருவரும் பேசி சமரச நிலைக்கு வந்திருக்கின்றனர் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

இந்திய வீரர்களிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை மக்கள் அதிகமாக பேசி வருகிறார்கள் என்று தெரிகிறது. ஆனால் அதற்குப் பிறகு மூன்று நாட்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஜோடியாக பேட்டிங் மற்றும் பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது அணி நல்ல சிந்தனையில் சென்று கொண்டிருக்கிறது என்று உணர்ந்தேன்.

இதையும் படிங்க:தனக்கு கிடைக்க வேண்டிய இந்திய கோச் பதவி.. மோர்கலுக்கு கொடுத்த கம்பீர்.. முதல் முறை பேசிய ஜாகீர் கான்.. உணர்ச்சிவசப்படும் ரசிகர்கள்

இதற்கு முழு பெருமை இந்திய பயிற்சியாளராக திகழ்ந்த ராகுல் டிராவிடைதான் சேரும். அவர் மூத்த வீரர்களை கையாண்ட விதம் அற்புதமாக இருந்தது. அவர் ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவருக்கிடையேயான பிரச்சனைகளை அணுகி அதை எவ்வாறு கையாண்டு சிறப்பாக முடித்தார் என்ற பெருமை அவரையே சாரும்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles