எனக்கு பட்லர் மூத்த அண்ணனை மாதிரி.. 7 ஆண்டுகளாக நேரம் செலவழித்து உருவான நட்பு.. சஞ்சு சாம்சன் சோகம்

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் 10 நாட்களில் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் கேகேஆர் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி விளையாடவுள்ளது. இதன்பின் நடக்கவுள்ள 2வது போட்டியில் ராஜஸ்தான் – ஐதராபாத் அணிகள் விளையாடவுள்ளன. கடந்த 3 சீசன்களில் ராஜஸ்தான் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு மட்டும் 2 முறை முன்னேறி இருக்கிறது.

- Advertisement -

இதனால் இம்முறை ராஜஸ்தான் அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேபோல் ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இணைந்துள்ளார். இம்முறை சஞ்சு சாம்சனும் அபார ஃபார்மில் இருப்பதால், 2வது முறையாக சாம்பியன்ஷிப் பட்டத்தை ராஜஸ்தான் அணி கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது.

- Advertisement -

சஞ்சு சாம்சன் பேட்டி

- Advertisement -

இருந்தாலும் ராஜஸ்தான் அணி ஜோஸ் பட்லர் மீண்டும் எடுக்காதது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேசும் போது, ஐபிஎல் தொடர் எனக்கு ஏராளமான வாய்ப்புகளை கொடுத்துள்ளது. ஒரு அணியை வழிநடத்தவும், பல்வேறு வீரர்களுடன் நெருங்கிய நட்புடன் பழகவும் வாய்ப்பு அமைத்து கொடுத்திருக்கிறது.

ஜோஸ் பட்லர் எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவர். 7 ஆண்டுகளாக நாங்கள் இருவரும் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி இருக்கிறோம். இந்த 7 ஆண்டுகளில் எங்களுக்கு இடையிலான பேட்டிங் பார்ட்னர்ஷிப் சிறப்பாக அமைந்தது. அதனால் எங்களுக்கு இடையிலான நெருக்கமும் அதிகரித்தது. பட்லர் எனக்கு ஒரு அண்ணனை போன்றவர்.

- Advertisement -

பட்லரிடம் பேசியது என்ன?

எந்த நேரத்திலும் அவரை அணுக முடியும். எந்த சந்தேகத்தையும் அவரிடம் கேட்க முடியும். 2021ல் நான் கேப்டனாக நியமனம் செய்யப்பட்ட போது, அவர் துணைக் கேப்டனாக இருந்து எண்ணற்ற உதவிகளை செய்துள்ளார். அதனால் ராஜஸ்தான் அணியில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும் என்று முடிவு எடுத்தது மிகப்பெரிய சவாலாக இருந்தது. இங்கிலாந்து ஒருநாள் தொடரின் போது கூட அவரிடம் இதை கூறினேன்.

வாழ்க்கையில் ஏதாவது ஒரு விஷயத்தை மாற்ற வாய்ப்பு கிடைத்தால், ஐபிஎல் ரீடெய்ன் விதிமுறை மாற்றுவேன் என்று இரவு சாப்பிட்ட போது அவரிடம் கூறினேன். திடீரென ஒரு உறவை இழப்பது எளிதானதல்ல. அதற்கு ஏராளமான ஆண்டுகள் நாம் செலவழித்திருக்கிறோம். அவர் எனது குடும்பத்தில் ஒருவர். அதற்குமேல் என்ன சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles