சூரியவன்சிதான் பெஸ்ட் பேட்ஸ்மேன்.. நான்லாம் ஆடறதை நிறுத்திடலாம்.. வேற மாதிரி வரப்போறார் – ஜோஸ் பட்லர் வியப்பு

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஜோஸ் பட்லர் இந்தியாவின் 14 வயதான வைபவ் சூரியவன்சியின் பேட்டிங் திறமையை குறித்து மிகவும் வியந்து பேசியிருக்கிறார். தான் பார்த்ததிலேயே அவர்தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று கூறி ஆச்சரியப்படுத்தி உள்ளார். மேலும் எதிர்காலத்தில் அவர் மிகச்சிறந்த வீரராக உருவாகி வருவார் என்றும் கூறியிருக்கிறார். குறிப்பாக அண்டர் 19 கிரிக்கெட் இறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 80 பந்துகளில் 175 ரன்கள் அவர் குவித்ததை குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து ஜோஸ் பட்லர் பேசும் பொழுது “நான் அந்த போட்டியை டிவியில் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் விளையாடிய சில ஷாட்டுகள் பார்க்கும்போது வழக்கமானவை கிடையாது. அது மிகவும் தனித்தன்மை கொண்டதாக இருந்தது. நான் பார்த்ததில் உறுதியாகச் சொல்வேன் இவர்தான் மிகச்சிறந்த வீரர். ஏனென்றால் 14 வயதில் வேறு யார் இப்படி எல்லாம் விளையாடியிருக்கிறார்கள்? இவர் 18 வயதுக்கு வரும்போது இன்னும் எப்படி எல்லாம் விளையாடுவார்?”

- Advertisement -

“இவர் ஐபிஎல் தொடரின் சாதிக்காமல் இருந்திருந்தால் இவர் பெரிய கிரிக்கெட்டில் என்ன செய்கிறார்? பார்க்கலாம் என்று சொல்லி இருக்கலாம். ஆனால் இவரோ ஐபிஎல் தொடரில் அமர்க்களமாக ஒரு சதத்தை அடித்து விட்டார். இதற்கு மேல் இவர் திறமை குறித்து நாம் என்ன சந்தேகத்தோடு பேச முடியும்?”

- Advertisement -

“இந்த 14 வயது சிறுவன் இப்படி விளையாடுவதை பார்க்கும் பொழுது எனக்கு ஒரு பக்கத்தில் ஊக்கமாக இருக்கிறது. இன்னொரு பக்கத்தில் கொஞ்சம் மனம் உடைந்து போய்விடுகிறது. இந்தப் பிள்ளைகள் இப்படி விளையாடும் போது நாமெல்லாம் ஏன் தொடர்ந்து விளையாட வேண்டும்? என்று தோன்றி விடுகிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles