ஐபிஎல்னால எங்க வீரர்கள் கெட்டு போய்ட்டாங்க.. இப்படி விளையாடுவதற்கு போய் சர்க்கஸ்ல வித்தை காட்டலாம்- பாய்காட் விமர்சனம்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸில் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான ஜெப்ரி பாய்காட் இங்கிலாந்து வீரர்கள் குறித்து தனது விமர்சனத்தை கூறியிருக்கிறார்.

- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக இங்கிலாந்து அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்டில் இங்கிலாந்து அணி ஓரளவு தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வரும் நிலையில் இதற்கு முன்னர் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்து மோசமாக டெஸ்ட் தொடரை இழந்தது.

- Advertisement -

டி20 கிரிக்கெட்டின் மோகத்தால் பஸ் பால் முறையை கையில் எடுத்த இங்கிலாந்து அணி, தொடக்கத்தில் இங்கிலாந்தில் இதே முறையில் அதிரடியாக விளையாடி வெற்றி கண்டதால் வெளிநாட்டு மைதானங்களிலும் இதேபோல் விளையாடி வெற்றி பெற்று விடலாம் என்று நம்பிக்கையே இந்திய அணி தகர்த்தது. இங்கிலாந்துக்கு எதிராக சரியாக திட்டம் தீட்டிய இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளில் வெற்றி பெற்ற வரலாற்று சாதனை படைத்தது.

இந்தச் சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான ஜெஃப்ரி பாய் காட் ஐபிஎல் மோகத்தால் இங்கிலாந்து வீரர்கள் தவறான முறையில் விளையாடி வருகின்றனர் என்று தனது விமர்சனத்தை கூறி இருக்கிறார். இது குறித்து அவர் விரிவாக கூறும் பொழுது “வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து அணி சுமாரான பங்களிப்பை வெளிப்படுத்தியது. இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரால் எங்கள் சராசரி டெஸ்ட் வீரர்கள் பணக்கார வீரர்களாக உருவாகியுள்ளனர்.

- Advertisement -

இதனால் இந்தியாவில் நடைபெற்றடெஸ்ட் தொடரில் நான்கு போட்டிகளில் மோசமான தோல்வியை சந்தித்தது.எங்கள் வீரர்கள் ஈகோ என்ற காரணத்தினால் அதிரடியாக விளையாடி ரசிகர்களை பரவசப்படுத்த போய் மோசமான தோல்வியை சந்தித்தது. நான் அதிரடியாக விளையாடுவதை தவறு என்று சொல்லவில்லை. ஆனால் அதற்கான வெற்றியை பெற வேண்டும். டெஸ்ட் போட்டிகள் ஒரு கண்காட்சி கிடையாது.

இதையும் படிங்க:விராட் கோலி மட்டும் பாகிஸ்தான் வந்தா.. அதுக்கப்புறம் இந்தியாவை மறந்து விடுவார் – அப்ரிடி பேட்டி

அதில் முடிவு முக்கியம் இல்லை என்று நினைத்து இவ்வாறு விளையாடினால் போய் சர்க்கஸில் சேர்ந்து கொள்ளலாம். அங்கேதான் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கவலை இல்லாமல் சிரித்து சந்தோஷமாக இருக்கலாம் என்று கூறி இருக்கிறார். முன்னதாக 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிகளில் இங்கிலாந்தில் நடைபெற்றும் இங்கிலாந்து இறுதி போட்டிக்கு தகுதி வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles