மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி லீத் தொடர் தற்போது எட்டு வருடங்கள் கழித்து மீண்டும் பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடுவது மீண்டும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒரு நாள் உலகக் கோப்பை தொடர் போலவே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் தொடரான சாம்பியன்ஸ் டிராபி என்று அழைக்கப்படும் மினி உலகக் கோப்பைத் தொடர் கடைசியாக 2017 ஆம் ஆண்டு நடைபெற்றது. அந்தத் தொடரில் கடைசியாக பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்த சூழ்நிலையில் அதற்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 உலக கோப்பைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததன் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி இதுவரை நடைபெறவில்லை. இந்த சூழ்நிலையில் இந்தத் தொடரை மீண்டும் நடத்த ஐசிசி கவனம் செலுத்தி வரும் நிலையில் இந்த முறை பாகிஸ்தான் அரசு நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணி நடத்தினால் இந்தியா பாகிஸ்தான் சென்று விளையாடுமா? அல்லது இந்தியாவுக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் சரியான முறையில் இருக்குமா? என்பது போன்ற சந்தேகங்கள் எழுந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதற்கு சரியான விளக்கத்தையும் கொடுத்தது.
ஆனாலும் தற்போது பிசிசிஐ பாகிஸ்தான் செல்ல விளையாட மறுப்பு தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சாகித் அப்ரிடி பாகிஸ்தானில் விராட் கோலிக்கு அளிக்கப்படும் வரவேற்பில் இந்திய உபசரிப்பை மறந்து விடுவார் என்று கூறியிருக்கிறார். இது குறித்து அப்ரிடி விரிவாக கூறும்பொழுது ” கோலி ஒருமுறை வந்து பாகிஸ்தானுக்கு விளையாடினால் அவர் அதற்குப் பிறகு இந்தியாவில் அவருக்கு அளிக்கக்கூடிய உபசரிப்புகளை மறந்து விடுவார்.
அந்த அளவிற்கு விராட் கோலிக்கு தீவிரமான ரசிகர்கள் உள்ளனர். நான் விராட் கோலி விளையாடுவதை பார்க்க ஆவலாக இருக்கிறேன். பாகிஸ்தானில் வந்து இந்தியா விளையாடுவதில் பாகிஸ்தான் வரவேற்க தயாராக உள்ளது” என்று அப்ரிடி கூறியிருக்கிறார். இந்திய வீரர் விராட் கோலிக்கு பாகிஸ்தானில் ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் வீரர்களே இந்திய அணி வீரர் விராட் கோலி உடன் நட்புடன் பழகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இதையும் படிங்க:என் மோசமான 5 பந்துகள்.. ஆஸ்திரேலியாவின் தோல்விக்கு அதுவே காரணம்- மிட்சல் ஸ்டார்க் பேட்டி
இந்த சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் சாம்பியன்ஸ் டிராபி தொடரை இலங்கையில் நடத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதன் இறுதி முடிவு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கைகளில் தான் இருக்கிறது. இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாடுமா? அல்லது இலங்கையில் சாம்பியன்ஸ் டிராபி நடத்தப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

