டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது இந்தியாவின் சிறந்த வெற்றிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஸ்டார்க் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பந்துவீசிய அனுபவம் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இடம் எதிர்பாராத தோல்வியை தழுவி உலகக்கோப்பை தவறவிட்டது. அந்தத் தோல்வியிலிருந்து வெளிவர இந்திய வீரர்களுக்கு சில நாட்களுக்கு மேல் ஆனது. அதிலும் குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டார்.
இந்த சூழ்நிலையில் டி20 உலகக் கோப்பையை எதிர் கொண்ட இந்திய அணி திரும்பவும் ரோஹித் சர்மாவையே கேப்டனாக நியமித்து தொடரை எதிர்கொண்டது. லீக் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி அடுத்த சுற்றான சூப்பர் 8 சுற்றில் முக்கிய போட்டியாக ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டது. அதுவரை பேட்டிங்கில் தடுமாறி வந்த ரோகித் சர்மா இந்தப் போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் அதிரடியாக வெடித்தார்.
குறிப்பாக தான் செய்யும் சிறு தவறு கூட அது இந்திய அணியை பாதித்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த அவர், 92 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் பலமான வேகப்பந்துவீச்சாளர் ஆன ஸ்டார்க்கின் பந்துவீச்சில் தொடர்ச்சியாக 5 சிக்சர்களை விளாசினார். இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஆஸ்திரேலியா அணி ரோகித் சர்மாவின் அதிரடியான ஆட்டத்தில் டி20 உலக கோப்பையை விட்டு வெளியேறியது.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் பல நாட்கள் கழித்து அந்த நிகழ்வு குறித்து பேசும் பொழுது “டி20 உலக கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நான் ஐந்து மோசமான பந்துகளை வீசினேன். ரோகித் சர்மா அந்த அனைத்து பந்துகளையும் சிக்ஸர்களாக விளாசினார். அது மிகவும் மோசமான தருணமாக நான் உணர்ந்தேன். அதுவே ஆஸ்திரேலியாவின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது” என்று கூறினார்.
இதையும் படிங்க:வெளிநாட்டில் தஞ்சம் அடைந்த ரோகித் கோலி.. இத்தனை நாள் ஓய்வா.? இந்திய அணிக்கு எப்போது திரும்புவார்கள்.. விபரம்
அந்த நிகழ்வு அவரது மனதில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று தெளிவாக உணர முடிந்தது. ரோஹித் ஷர்மாவின் அதிரடியின் காரணமாக தான் ஆஸ்திரேலியா டி20 உலக கோப்பையை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

