பும்ரா ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா.? மும்பை அணிக்கு வினோத சிக்கல்.. வெளியான புதிய தகவல்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நிலையில் இதற்கு அடுத்ததாக இந்திய அணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கு பெற இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் விளையாடாத ஜஸ்பிரித் பும்ரா ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் போது காயம் காரணமாக வெளியேறிய பும்ரா, அதற்குப் பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடாத நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இந்திய அணியில் இருந்து வெளியேறினார். இந்த சூழ்நிலையில் பும்ரா தற்போது பந்து வீசுவதற்கான முதல் கட்ட பயிற்சியை ஆரம்பித்து விட்டார் என்று தெரிகிறது. அவர் தற்போது பெங்களூரில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தில் மறு வாழ்வில் இருந்து வருகிறார். தற்போது அவர் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மேலும் பும்ரா பந்துவீச்சின் ஆரம்ப கட்ட பயிற்சிகளையும் தற்போது ஆரம்பித்து விட்டார். ஆனால் ஐபிஎல் தொடரில் அவர் விளையாடுவது குறித்து நல்ல செய்தி எதுவும் வரவில்லை. ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி கேகேஆர் மற்றும் பெங்களூர் அணிகள் விளையாட உள்ள நிலையில் அதற்கு அடுத்த போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாட உள்ளன. முக்கியமான இந்த போட்டியில் பும்ரா விளையாடுவாரா? என்பதற்கான தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

மார்ச் 22ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடர் ஆரம்பிக்க உள்ளதால் அதற்குள் பும்ரா முழு உடல் தகுதியை எட்டி இருக்க மாட்டார் என்று தகவல்கள் வெளிவருகிறது. அவர் விளையாட ஆரம்பித்தாலும் அவர் ஏப்ரல் முதல் வாரத்தில் தான் மும்பை அணியுடன் இணைவார் என்று தெரிகிறது. மேலும் பிசிசிஐ ஐபிஎல் தாண்டி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ளதால் குறைந்தது மூன்று போட்டிகள் ஆவது விளையாட வேண்டும் என்று விரும்புகிறது. இதனால் பும்ரா விஷயத்தில் எந்த ஒரு அவசரமான முடிவையும் எடுத்து விடக்கூடாது என்பதில் இந்திய கிரிக்கெட் வாரியம் தெளிவாகவே உள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க:கெட்டதில் ஒரு பெரிய நல்லது.. வில்லியம்சனுக்கு நடந்த இந்த சோகம் தான் ரச்சின் ரவீந்திரா வாழ்க்கையையே மாத்திடுச்சு – உண்மையை உடைத்த டிம் சவூதி

இதனால் ஐபிஎல் முடிந்து பிறகு முகமது சமி மற்றும் பும்ரா ஆகிய இருவரும் குறைந்தது மூன்று டெஸ்ட் போட்டிகளாவது விளையாட வேண்டும் என்பதால் அவர்கள் இருவரது செயல்பாடுகள் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் தற்போது உன்னிப்பாக கவனித்து வருகிறது. பும்ரா இல்லாமல் முதல் வாரத்தில் விளையாடும் மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது சிக்கலில் சிக்கி உள்ளது. மும்பை அணியின் ஆஸ்தான பந்துவீச்சாளராக அவர் திகழ்வதால் குறிப்பிடத்தக்க ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே பும்ரா மும்பை அணியுடன் விளையாடுவார் என்று தகவல்கள் வெளிவரும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி இது குறித்து என்ன முடிவு எடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles