சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் வருகிற 19-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இறுதி அணி நேற்று இரவு அறிவிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகியுள்ளார் என்ற தகவல் நேற்று வெளிவந்த நிலையில் தற்போது அவர் உடல் தகுதியுடன் இருக்கிறார் எனவும், அவரை குறிப்பிட்ட ஒருவர் தேர்வு செய்ய விரும்பவில்லை எனவும் பரபரப்பு தகவல் வெளிவந்துள்ளது.
பும்ரா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் போது காயம் அடைந்த காரணத்தால் அந்த போட்டியில் முழுவதுமாக விளையாடாமல் பாதியில் வெளியேறினார். அதற்குப் பிறகு அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் அவர் முழு மருத்துவ ஓய்வில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குள் குணமடைந்து விடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டு 15 பேர் கொண்ட இந்திய அணியிலும் இடம் பிடித்தார்.
இந்த நிலையில் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே இருக்கிறது. இந்த சூழ்நிலையில் பும்ரா காயம் காரணமாக நேத்து விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக ஹர்ஷித் ரானா சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்த சூழ்நிலையில் பும்ரா உடல் தகுதியுடன் இருப்பதாகவும் ஆனால் அவர் விளையாட முடியாத காரணமும் தற்போது வெளிவந்துள்ளது.
இது குறித்து பிசிசிஐ தரப்பில் வெளிவந்த அறிக்கையில் ” தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் நிதின் பட்டேல் பும்ராவின் உடல் தகுதி பற்றி வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் அவரது உடல் தகுதி நன்றாக இருப்பதாகவே தெரிகிறது. ஆனால் போட்டி நேரத்தில் அவர் பந்து வீச முழு தகுதியுடன் இருப்பாரா? என தெரியாது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே இதன் காரணமாக பிசிசிஐ இந்த விஷயத்தில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. தற்போது நிதின் பட்டேல் இந்த பிரச்சனையை அகர்கர் பக்கம் விட்டு விட்டார்.
இதையும் படிங்க:என்ன நடக்குது ஆஸ்திரேலிய அணியில்… மேலும் ஒரு முன்னணி வீரர் திடீர் விலகல்… செமி ஃபைனலுக்கு தகுதி பெறுமா மஞ்சள் படை
மருத்துவக் குழு பச்சை சிக்னல் காட்டாத நிலையில் தேர்வு குழு மட்டும் எப்படி அவரை தேர்வு செய்ய முடியும். பும்ராவை ஒருவேளை தேர்வு செய்து அவர் போட்டியின் போது காயமடைய நேர்ந்தால் அது பெரிய சங்கடமாக மாறிவிடும். 2022 ஆம் ஆண்டு ஏற்கனவே இப்படி ஒரு நிகழ்வு நடந்தபோது அப்போது தேர்வுக்குழு தலைவராக சேத்தன் சரமா இருந்தார். அப்போது பும்ரா வெளியேறிய நிலையில் கிட்டத்தட்ட ஒரு வருட காலம் இந்திய அணியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

