“இந்திய அணியில் இனி எனக்கு இடம் கிடைப்பது கஷ்டம்” – 2022 உலக கோப்பை இந்திய அணி வீரர் பேட்டி.!

2012 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட்டின் மூலம் சர்வதேச அரங்கில் அறிமுகமானார் புவனேஸ்வர் குமார். அதே வருடம் இந்தியாவின் ஒரு நாள் போட்டிக்கான அணியிலும் இடம் பெற்றார். பந்துகளை இரண்டு பக்கமும் சுவிங் செய்யும் திறமை பெற்ற இவர் ஒரு வருடத்திற்குள்ளேயே மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியாவின் முதன்மை பந்து வீச்சாளராக உயர்ந்தார்.

- Advertisement -

காயம் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் அதிகம் விளையாடாமல் இருந்த இவர் ஒரு நாள் மட்டும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவிற்காக தொடர்ந்து விளையாடி வந்தார். 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் போது பாகிஸ்தான் அணிக்கு எதிராக காயம் அடைந்த இவர் பெரும்பாலான உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடவில்லை.

- Advertisement -

காயத்திலிருந்து மீண்டு தொடர்ந்து விளையாடி வந்தாலும் இவருடைய வேகம் மற்றும் பந்துவீச்சித் திறன் துவக்க காலகட்டத்தில் இருந்தது போல் இல்லாததும் முகமது சிராஜ், பிரதீஷ் கிருஷ்ணா போன்ற பந்துவீச்சாளர்களின் எழுச்சியும் புவனேஸ்வர் குமாரை அணியில் இருந்து ஓரம் கட்டியது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய வில் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் பங்கேற்ற இவர் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடினார்.

- Advertisement -

அதன் பிறகு இந்தியாவில் வைத்து நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் இலங்கையை அணிகளுக்கு எதிரான போட்டி தொடரிலும் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும் போது இந்திய அணியின் தேர்வாளர்கள் புவனேஸ்வர் குமாரை இனி அணியில் எடுப்பார்களா என்பது சந்தேகமே. இது தொடர்பாக நேஷனல் பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசி இருக்கிறார் புவனேஸ்வர் குமார்.

இது குறித்து பேசி இருக்கும் அவர் ” ஒவ்வொரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையிலும் நடக்கக்கூடிய ஒன்றுதான். இன்னும் சில வருடங்கள் தான் உங்களால் கிரிக்கெட் விளையாட முடியும் என்று நினைக்கும் போது மனம் அதை ஏற்க மறுக்கும். ஆனால் அதுதான் உண்மை . இது போன்ற ஒரு சூழ்நிலையில் இருக்கும் போது கிரிக்கெட்டை ரசித்து விளையாட வேண்டும். அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன். கிரிக்கெட்டை ரசிப்பதை தவிர வேறு எந்த எண்ணமும் என் மனதில் இல்லை” என கூறி இருக்கிறார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” நான் இந்திய அணியில் இடம் பெறவில்லை என்பதை நினைத்து கவலைப்படவில்லை . என்னுடைய நோக்கம் எல்லாம் அதிகமான கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதுதான். இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்பதற்காக நான் வித்தியாசமான முயற்சிகள் எதையும் செய்யப் போவதுமில்லை. மீதி இருக்கும் காலங்களில் நல்ல கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். அதனால் மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தால் எனக்கு மகிழ்ச்சியே. ஆனால் நான் இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்பதற்காகவே கிரிக்கெட் விளையாட வில்லை . என்னுடைய கிரிக்கெட்டை ரசித்து விளையாடுகிறேன். கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பது மட்டும்தான் என்னுடைய குறிக்கோள் . அதற்காக அனைத்து விதமான லீக் போட்டிகள் மற்றும் எல்லா கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதை விரும்புகிறேன் என்று தெரிவித்திருக்கிறார் .

இதுவரை இந்திய அணிக்காக 21 டெஸ்ட் போட்டிகள் 121 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 87 டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் உரையாடி இருக்கும் புவனேஸ்வர் குமார் டெஸ்ட் போட்டிகளில் 63 விக்கெட்டுகளையும் ஒரு நாள் போட்டியில் 141 விக்கெட்டுகளையும் டி20 சர்வதேச போட்டிகளில் 90 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார் . மேலும் 160 ஐபிஎல் போட்டிகளில் விளையாடு இருக்கும் இவர் 170 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2013 முதல் 2016 காலகட்டங்களில் இந்திய அணியின் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் முக்கிய பந்துவீச்சாளராக விளங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles