சிக்கன் மட்டன் சுத்தமா இல்ல.. வைபவ் ஸ்டாமினாவுக்கு இதான் காரணமா.. பவுலர்களை வதம் செய்யும் அவரது உணவுப் பழக்கம் இதோ

நேத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பவுலர்களை வதம் செய்த ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்சி 97 ரன்கள் விளாசி ராஜஸ்தான் அணி ஜெயிப்பதற்கு மிக முக்கிய பங்காற்றினார். இதனால் ராஜஸ்தான் அணி இரண்டாவது குவாலிபயர் போட்டியில் நாளை குஜராத் அணிக்கு எதிராக விளையாட உள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் வெறும் 15 வயதான வைபவ், தற்போது உணவு கட்டுப்பாட்டை மிகத் தீவிரமாக கடைப்பிடித்து வருகிறாராம். அவருக்குப் பிடித்த சிக்கன், மட்டன் மற்றும் சாக்லேட் ஐட்டங்களை முற்றிலும் தவிர்த்து, அதற்கு பதிலாக சைவ உணவுகளை தனது உணவுக் கட்டுப்பாட்டில் சேர்த்து இருக்கிறார். முட்டைகளை முற்றிலும் தவிர்த்த அவர், புரதத்திற்காக பால், தயிர் மற்றும் பருப்பு, கீரை வகை உணவுகளை அதிக அளவில் எடுத்துக் கொள்கிறாராம். மேலும் ஓட்ஸ் தானியங்கள் கலவையிலான சப்பாத்தி போன்ற உணவுகளை உட்கொள்கிறார்.

- Advertisement -

அதேபோல பீட்சா, பர்கர் போன்ற பொறித்த உணவுகளை முற்றிலுமாக தவிர்த்திருக்கும் அவர், வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிட்டு வருகிறாராம். இது அவரது ஸ்டாமினாவை பெரும் அளவில் உயர்த்த மிக முக்கிய பங்காற்றுகிறது. இது அவரது தந்தை மற்றும் பயிற்சியாளரின் அறிவுறுத்தலின் பேரில் இத்தகைய உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடித்து வருகிறார். மேலும் போட்டி தொடங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பாக வீட்டில் சமைத்த எளிய உணவுகளை சாப்பிட்டு வருகிறாராம்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles