எனக்கு மட்டும் இவ்வளவு எதுக்கு.. எல்லாருக்கும் சமமா குடுங்க.. ட்ராவிட்டின் பெருந்தன்மை

இந்திய அணி டி20 உலக கோப்பையை வெற்றிகரமாக வென்று முடித்த கையோடு அதன் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் ராவிட்டும் விலகி இருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் பிசிசிஐ அறிவித்த 125 கோடி பரிசுத்தொகையில் ராகுல் டிராவிட் காட்டிய பெருந்தன்மை தற்போது ரசிகர்களிடையே நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இந்திய அணி கடந்த 17 வருடங்களாக டி20 உலக கோப்பையை வெல்லாத நிலையில் தற்போது ரோகித் சர்மா தலைமையில் டி20 உலக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. வீரர்களின் கடின உழைப்புக்கு கிடைத்த இந்த வெற்றியை பிசிசிஐ பாராட்டும் விதமாக அதன் செயலாளர் ஜெய்ஷா இந்திய அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசுத் தொகையை அறிவித்தார்.

- Advertisement -

இந்த பரிசுத் தொகையானது வீரர்களுக்கு மட்டுமின்றி பயிற்சியாளர், துணை பயிற்சியாளர், பிசியோதெரபிஸ்ட், ட்ரெயினர் இன்னும் சக ஊழியர்கள் அனைவருக்கும் பிரித்துக் கொடுக்கும் வகையில் அறிவித்தது. இந்த சூழ்நிலையில் அணியில் விளையாடிய 15 வீரர்களுக்கு தலா 5 கோடி ரூபாயும், ரிசர்வ் பட்டியலில் இருந்த நான்கு வீரர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாயும் அறிவித்த நிலையில், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு 5 கோடியும், துணை பயிற்சியாளர் இன்னும் சில சக ஊழியர்களுக்கு 2.5 கோடி ரூபாயும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனை அறிந்த ராகுல் டிராவிட் தனக்கு அறிவிக்கப்பட்ட ஐந்து கோடி ரூபாய் பரிசுத்தொகை வேண்டாம் எனவும், துணைப் பயிற்சியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டதை போலவே 2.5 கோடி ரூபாய் மட்டும் போதும் என்று கூறி இருக்கிறார். அதாவது துணைப் பயிற்சியாளர்கள் ஒத்துழைப்பின்றி தன்னால் தனியாக இதை செய்திருக்க முடியாது என்பதை உணர்த்தும் வகையிலேயே டிராவிட்டின் செயல்பாடு தற்போது அமைந்துள்ளது.

- Advertisement -

2007ம் ஆண்டு ராகுல் டிராவிட் வீரராக விளையாடிய போது ஒரு நாள் உலகக் கோப்பையில் படுதோல்வி அடைந்த இந்திய அணி வெளியேறியது. அதற்குப் பிறகு தற்போது இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டு தனது கடைசி தருவாயில் டி20 உலக கோப்பையோடு இந்திய அணிக்கு பிரியா விடை கொடுத்திருக்கிறார். இருப்பினும் பிசிசிஐ அறிவித்த ஐந்து கோடி ரூபாய் வேண்டாம் என்று கூறியது ராகுல் டிராவிட்டின் நெகிழ்வுத் தன்மையை காட்டி இருப்பதாக ரசிகர்கள் கூறி இதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க:எனது குறிக்கோள் இது மட்டுமே.. இதை செய்ய என் அதிகாரத்தை முழுவதும் பயன்படுத்துவேன்- பயிற்சியாளர் கம்பீர்

ராகுல் டிராவிட்டின் பயிற்சிக்குப் பிறகு தற்போது இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்று இருக்கிறார். அவரது தலைமையில் அடுத்ததாக இந்திய அணிய சாம்பியன்ஷிப் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்சிப் தொடர்களில் மோத உள்ள நிலையில் அவரது பயிற்சி இந்திய அணிக்கு எப்படி இருக்க போகிறது என்று காண ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles