இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர்.. முன்னாள் சிஎஸ்கே வீரருக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்.. விரைவில் வெளியாக உள்ள தகவல்

இந்திய தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் தற்போது விலகி இருக்கும் நிலையில், நேற்று இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கொல்கத்தா அணியின் ஆலோசகராக செயல்பட்டுக் கொண்டிருந்த கௌதம் கம்பீர் பொறுப்பேற்றார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணிக்கு பந்து வீச்சு பயிற்சியாளராக தமிழக வீரர் ஒருவருக்கு வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகின்றன.

- Advertisement -

தலைமை பயிற்சியாளருக்கு கீழ் பேட்டிங் பயிற்சியாளர், பந்துவீச்சு பயிற்சியாளர் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் என்று மூன்று வகையான பயிற்சியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்த சூழ்நிலையில் புதிய தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்ற பிறகு அவருக்கு கீழ் மூன்று பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள். தற்போதுள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் பயிற்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை தலைமை பயிற்சியாளர் இடமே ஒப்படைத்துள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் கொல்கத்தா அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு கொண்டிருந்த அபிஷேக் நாயரை கம்பீர் இந்திய அணிக்கு அழைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சூழ்நிலையில் பந்து வீச்சு பயிற்சியாளராக முன்னாள் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த வினய் குமாரை கேட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் இதற்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு மறுப்பு தெரிவித்த இந்திய கிரிக்கெட் வாரியம் தலைமை பயிற்சியாளருக்கு முழு பொறுப்பையும் வழங்க வேண்டாம் எனவும், அதில் பிசிசிஐயின் உள்ளீடு சிறிது இருக்க வேண்டும் எனவும் நினைத்து இருப்பதால் பந்து வீச்சுப் பயிற்சியாளரை தாமே தேடும் பணியில் தற்போது இறங்கி இருக்கிறது. பீல்டிங் பயிற்சியாளராக டி திலீப் செயல்பட்டுக் கொண்டிருந்த நிலையில் திரும்பவும் அவரே நியமிக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் பந்துவீச்சு பயிற்சியாளராக மும்பையைச் சேர்ந்த ஜாகிர் கான் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் வீரரான லட்சுமிபதி பாலாஜி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஜாகீர் கான் மற்றும் லட்சுமிபதி பாலாஜி ஆகியோர் இருவரும் ஐபிஎல்லில் மும்பை அணிக்காகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் பந்துவீச்சு பயிற்சியாளர்களாக ஏற்கனவே பதவி வகித்துள்ளனர்.

இதையும் படிங்க:எனக்கு மட்டும் இவ்வளவு எதுக்கு.. எல்லாருக்கும் சமமா குடுங்க.. ட்ராவிட்டின் பெருந்தன்மை

இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே அனுபவம் இருப்பதால், இவர்களில் ஒருவரை தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ தற்போது இறங்கி உள்ளது. விரைவில் இந்த இருவரில் யார் இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்ற தகவல் இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் விரைவில் வெளியாக இருக்கிறது. விரைவில் இந்திய அணிக்கு சேம்பியன் டிராபி மற்றும் அவர்கள் விரைவில் நெருங்க உள்ளதால் அதற்கான இந்திய அணியை வடிவமைக்கும் முயற்சியில் கம்பீர் இறங்கி இருப்பதாககிரிக்கெட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles