நம்பர் 1 பேட்ஸ்மேன்னா கொம்பா.. அது நடந்த எல்லாம் ஒன்னு தான்.. ரோகித் சர்மாவ பார்த்தே நான் பயப்படல – வங்கதேச பவுலர் அதிரடி பேட்டி

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடர் இன்று ஆரம்பமாகிறது. டெஸ்ட் போட்டி தொடரை இழந்த நிலையில் பங்களாதேஷ் அணி டி20 போட்டி தொடரை கைப்பற்றுவதற்காக தீவிரமாக முயற்சித்து வருகிறது. இந்நிலையில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் தன்சிம் ஹசன் சாகிப் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு சவால் கொடுத்திருக்கிறார். போட்டி தொடங்குவதற்கு முன்பான பேட்டியில் ரோகித் சர்மாவை பற்றி நான் பயப்பட்டதில்லை. எந்த பேட்ஸ்மேன் ஆக இருந்தாலும் அவர்களை வீழ்த்துவேன் என இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

- Advertisement -

பங்களாதேஷ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று முதல் தொடங்க இருக்கிறது. இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் விளையாடும் முதல் டி20 போட்டி குவாலியர் நகரில் இன்று தொடங்குகிறது. டெஸ்ட் போட்டி தொடரை இழந்த நிலையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய டி20 அணியை வீழ்த்தி போட்டித் தொடரை வெல்வதற்கு பங்களாதேஷ் அணி முனைப்பு காட்டி வருகிறது.

- Advertisement -

மேலும் பங்களாதேஷ் அணியின் கேப்டன், இந்திய அணிக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்த நிலையில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் தன்சிம் ஹசன் சாகிப் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். 2023 ஆம் வருடம் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விக்கெட்டை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பை போட்டி தொடரிலும் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோரின் விக்கெட்டுகளையும் தன்சிம் ஹசன் சாகிப் கைப்பற்றினார்.

- Advertisement -

இந்நிலையில் முதல் டி20 போட்டி தொடங்குவதற்கு முன்பாக இந்திய பேட்ஸ்மேன்களுக்கு இவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் ” கடந்த ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு எதிராக எனது முதல் சர்வதேச போட்டியை விளையாடினேன். அந்த அணிக்கு உலகின் சிறந்த பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா கேப்டனாக இருந்தார். மேலும் அனைவரும் நான் இன்னும் சர்வதேச போட்டிக்கு ரெடியாகவில்லை என்று கூறினர். ரோகித் சர்மாவை என்னால் சமாளிக்க முடியாது என்றும் தெரிவித்தனர். ஆனால் நான் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. ஆட்டத்தில் என்ன செயல்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். என்னுடைய திட்டங்களின்படி சிறப்பாக பந்துவீசி ரோஹித் சர்மா விக்கெட்டை வீழ்த்தினேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “நான் சரியான அளவில் பந்துவீசி அந்தப் பந்து ஸ்விங் ஆகும்போது எந்த ஒரு பேட்ஸ்மேனுக்கும் அது மிகப் பெரிய சவாலை ஏற்படுத்தும். மேலும் கிரிக்கெட் விளையாடும் போது என்னுடைய பலம் எது என்பதில் தான் கவனம் செலுத்துகிறேன். எதிரில் இருக்கும் பேட்ஸ்மேன் யார்.? எந்த நாட்டுக்கு எதிராக விளையாடுகிறோம்.? என்பதைப் பற்றிய சிந்தனை என் மனதில் இருக்காது. ஒரு சிறந்த பந்து எந்த ஒரு பேட்ஸ்மனையும் வீழ்த்தும் என்பதில் நான் முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் “சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த வீரர் அல்லது உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட கூடியவர் என்று நான் தரம் பிரித்துப் பார்ப்பதில்லை. என்னால் ஒரு சிறந்த பந்தை வீச முடியும் என்றால் அது எந்த ஒரு வீரரையும் வீழ்த்தும்” எனக் கூறினார். மேலும் “தனது முதல் போட்டியில் ரோகித் சர்மா விக்கெட்டை வீழ்த்தியதை நினைவுகூர்ந்த அவர் தன்னால் எந்த ஒரு வீரருக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்க முடியும்” எனவும் தெரிவித்தார். மேலும் தற்போது நடைபெற இருக்கும் டி20 தொடரிலும் சிறப்பாக பந்துவீசி இந்திய பேட்ஸ்மேன் களுக்கு மிகப்பெரிய சவாலை ஏற்படுத்துவேன் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles