நான் இந்த நிலைமையில் இருக்க காரணம் ஹர்திக் பாய் தான்.. அவர் சொன்ன அதுதான் எல்லாமே – இஷான் கிஷான் தகவல்

இந்திய டி20 அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷான் இந்திய அணிக்கு தான் தேர்வாகாமல் இருந்த காலகட்டத்தில் ஹர்திக் பாண்டியா தனக்கு அளித்த அறிவுரை தான் இந்த நிலைமையில் தான் இருப்பதற்கு காரணம் என்று கூறியிருக்கிறார். இருவருமே பரோடாவில் தனிப்பட்ட பயிற்சிகளில் சேர்ந்து ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இஷான் கிஷான் விளையாடிய பொழுது ஹர்திக் பாண்டியா உடன் நல்ல நட்புறவு இருந்து வந்தது.

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரின் போது இஷான் கிஷான் ஓய்வு கேட்டு இந்திய அணியை விட்டு வெளியேறினார். அதற்குப் பிறகு அவருக்கு எந்த வடிவத்திலும் இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சம்பள பட்டியலில் இருந்தும் நீக்கினார்கள். மேலும் நிறைய போட்டி இருப்பதால் அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது கடினம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில்தான் இந்திய தேர்வு குழுவில் இடம் பெற்ற பிரக்யான் ஓஜா மற்றும் ஆர்பி. சிங் இருவரும் இஷான் கிஷானை தேர்வு செய்து அவருடைய வாழ்க்கையை மாற்றி இருக்கிறார்கள்.

- Advertisement -

இதுகுறித்து இஷான் கிஷான் பேசும்பொழுது ” நான் எப்பொழுதும் அதிகமாக மற்றவர்களுடன் பேசிக் கொண்டே இருப்பேன். இந்திய அணிக்கு தேர்வாகாமல் இருந்த சமயத்தில் இது குறித்து நான் ஹர்திக் பாண்டியா பாயிடம் பேசினேன். அவர் அப்பொழுது என்னிடம் ‘ நீ இதை மற்றவர்களுடன் பேசிக்கொண்டு எதிர்மறையாகவே சிந்தித்துக் கொண்டு இருக்கப் போகிறாயா? இல்லை இதையெல்லாம் விட்டுவிட்டு போய் விளையாடி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவதில் கவனம் செலுத்தப் போகிறாயா?’ என்று கேட்டார். மேலும் எனக்கு தேவைப்படும் நேரங்களில் அவர் நிறைய அறிவுரைகளை கொடுத்து இருக்கிறார். இன்று நான் நல்ல நிலைமையில் இருப்பதற்கு அவருடைய பங்கும் முக்கியமானதாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles