சச்சினின் சாதனைகளுக்காக விராட் கோலி ஓரம் கட்டப்படுகிறாரா.? சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகுல் டிராவிட்டின் பேட்டி.!

உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மூன்று போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி இன்று மொகாலியில் வைத்து நடைபெற உள்ளது.

- Advertisement -

வருகின்ற அக்டோபர் ஐந்தாம் தேதி நடைபெற இருக்கும் உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இந்த ஒரு நாள் போட்டி தொடரில் விளையாட இருக்கின்றன. இந்தப் போட்டி தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளுக்கு ரோகித் சர்மா, விராட் கோலி,ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் போன்ற முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது.

- Advertisement -

இந்த ஓய்வு தொடர்பாக இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது. சமீப காலங்களில் அதிகமான போட்டிகளில் விளையாடாத விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு ஏன் ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என முன்னால் வீரர்கள் பலரும் தங்களது அதிருப்தியை தெரிவித்து இருந்தனர். மேலும் சில ரசிகர்கள் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை முறியடிப்பார் என்பதற்காகவே அவரை வேண்டுமென்றே அணியில் சேர்க்காமல் ஓய்வு கொடுத்து வருவதாக இந்திய அணியின் நிர்வாகத்தின் மீது குற்றம் சாட்டினார். இது மிகப்பெரிய சர்ச்சையாக இந்திய கிரிக்கெட் வட்டாரங்களில் வெடித்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேட்டியளித்து இருக்கிறார். மேலும் இந்த பேட்டியில் அவர் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு அளிக்கப்பட்ட ஓய்வு அனைவரிடமும் கலந்து ஆலோசிக்கப்பட்டு ஒரு மனதாக எடுக்கப்பட்ட முடிவு என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும் உலகக் கோப்பையில் அவர்கள் இருவரும் புத்துணர்வான மனநிலையுடன் விளையாடுவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக பேசியிருக்கும் ராகுல் டிராவிட்” விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு இந்த போட்டி தொடர்களில் ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது . இதன் மூலம் உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றிருக்கும் சூரியகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷான் போன்ற வீரர்களுக்கு அதிகமான போட்டி நேரத்தை கொடுத்து உலகக் கோப்பைக்கு அவர்களை தயார் நிலையில் வைக்க முடியும். மேலும் விராட் கோலி மட்டும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் புத்துணர்ச்சியுடன் உலகக் கோப்பையில் களமிறங்க வேண்டும் என்று அணி நிர்வாகம் விரும்புகிறது. அதனை கருத்தில் கொண்டு தான் முதல் இரண்டு போட்டிகளில் அணியின் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது” என்று தெரிவித்தார்.

- Advertisement -

மேலும் இதனைப் பற்றி விரிவாக பேசிய அவர்” சூரியகுமார் யாதவ் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு வீரர். அவரின் மீது அணி நிர்வாகம் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறது. அவர் ஒரு போட்டியில் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதை டி20 போட்டிகளில் மட்டும் தான் பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு நாள் போட்டியிலும் அவரால் இந்த தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இந்த ஒரு நாள் போட்டி தொடரில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருப்பதின் காரணமாக அவர் இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு உலகக் கோப்பைக்கு முன்பாக அவர் ஃபார்மிற்கு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தார்.

இஷான் கிஷான் குறித்து பேசிய ராகுல் டிராவிட் ” இஷான் கிஷான் இந்திய அணிக்கு பலவிதமான வாய்ப்புகளை கொடுக்கக் கூடிய ஒரு வீரராக இருக்கிறார். அவரால் ஐந்தாவது இடத்திலும் விளையாட முடியும். மேலும் அவர் ஒரு துவக்க ஆட்டக்காரர் ஆகவும் விளையாடக்கூடிய வீரர். இது அணிக்கு தேவைப்படும் நேரத்தில் ஒரு சமநிலையை தருகிறது. கூடுதலாக அவர் ஒரு விக்கெட் கீப்பராகவும் இருப்பது அணியின் சமநிலையை மேலும் அதிகப்படுத்துகிறது” என்று கூறினார். மேலும் அணியின் முன்னணி வீரர்களின் ஓய்வு குறித்து விளக்கமாக பேசிய அவர் ” ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களுக்கு நெருக்கடி இல்லாமல் நல்ல மனநிலையுடன் விளையாடுவதை அணி நிர்வாகம் விரும்புகிறது. அதன் காரணமாக ஒரு மனதாக கலந்து ஆலோசிக்கப்பட்டு தான் அவர்கள் இருவருக்கும் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஓய்வு வழங்கப்பட்டு இருக்கிறது. இது உலக கோப்பை அணியில் விளையாடும் மற்ற வீரர்களுக்கு தங்களை பரிசோதித்துக் கொள்ளும் ஒரு வாய்ப்பாகவும் அமைந்திருப்பதாக” தனது பேட்டியில் தெரிவித்திருக்கிறார் ராகுல் டிராவிட்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles