இப்படி ஒரு விஷயம் இருக்கா.. 9 பவுலர் யூஸ் பண்ணதற்கான காரணம்.. ரோகித் சர்மா சொன்ன முக்கிய தகவல்.!

13 வது உலகக்கோப்பை தொடரின் இறுதி லீக் ஆட்டம் இன்று பெங்களூரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி மற்றும் கடைசி இடத்தில் இருக்கும் நெதர்லாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்

- Advertisement -

ரோகித் சர்மா கில் மற்றும் விராட் கோலி ஆகியோர் அரை சதம் அடிக்க ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் சதம் எடுத்து விலாசினர். இதனால் இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 410 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து விளையாடிய நெதர்லாந்து அணி 250 ரன்கள் அவுட் ஆனது. இந்தப் போட்டியிலும் இந்திய அணியின் ஆதிக்குமே தொடர்ந்து. இந்தியா நெதர்லாந்தை 160 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஒன்பது போட்டியிலும் வெற்றி பெற்று 18 புள்ளிகளுடன் லீக் சுற்றை சிறப்பாக முடித்து இருக்கிறது.

- Advertisement -

இந்தப் போட்டியில் இந்திய அணியின் முதல் ஐந்து வீரர்களும் 50+ ரன்கள் எடுப்பது இந்தியாவின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் வரலாற்றில் இதுவே முதல்முறை. மேலும் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 208 ரன்கள் சேர்த்து உலகக்கோப்பையில் நான்காவது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த இந்திய ஜோடி என்ற மகத்தான சாதனையையும் படைத்திருக்கிறது. அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் உலகக் கோப்பை போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

- Advertisement -

இந்திய அணியின் பொந்துவீச்சில் பும்ரா, சிராஜ், குல்தீப் மற்றும் ஜடேஜா ஆகியோர் இரண்டு விக்கெட் வீழ்த்தினர். மேலும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரும் பொந்துவீச்சில் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இன்றைய போட்டியில் 9 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தினார். அணியின் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தவிர மீது அனைத்து வீரர்களும் இன்று பந்து வீச்சில் ஈடுபட்டனர்.

போட்டி முடிந்த பின் நடைபெற்ற பரிசளிப்பு விழாவின் போது அதற்கான காரணத்தையும் கூறியிருக்கிறார் ரோஹித் சர்மா. இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் ” இந்த உலகக் கோப்பை போட்டியின் தொடக்கத்தில் இருந்தே நாங்கள் ஒரு போட்டி பற்றி மட்டுமே சிந்தித்து செயல்பட்டோம். இது மிகப்பெரிய டோர்னமெண்ட். அதனால் எந்த இடத்திலும் நாங்கள் அடுத்து வர இருக்கும் போட்டியை தவிர வேறு எந்த போட்டியை பற்றியும் யோசித்ததில்லை. ஒரு போட்டியில் மட்டுமே கவனம் செலுத்தி விளையாடுவது பெரிய டோர்னமெண்ட் களில் முக்கியமான ஒன்று. இந்த உலகக் கோப்பை விளையாடிய அணிகளில் இந்தியா மட்டும் தான் ஒன்பது வெவ்வேறு இடங்களில் விளையாடி இருக்கிறது. இந்த ஆடுகளங்கள் பழக்கப்பட்ட ஒன்று என்றாலும் அங்கு வெவ்வேறு அணிகளை சந்திப்பது சவாலான ஒன்று” என்று தெரிவித்தார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரர்களும் சிறமையை வெளிப்படுத்தினார். அணி எந்த ஒரு தனிப்பட்ட வீரத்தையும் சார்ந்திருக்காமல் ஒரே அணியாக விளையாடியது எங்களது வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். அதேநேரம் சுழற் பந்து வீச்சாளர்களும் அணிக்கு தேவையான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்தனர். முதல் நான்கு போட்டிகளில் இரண்டாவதாக பேட்டிங் செய்து வெற்றி பெற்றோம். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஐந்து போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்து வெற்றி பெற்றிருக்கிறோம். ஒவ்வொரு போட்டியின் வெற்றியும் அணியின் சூழ்நிலையை தீர்மானிக்கும்.

எங்களது ஆட்டத்தை ரசித்து விளையாடி வருகிறோம். ஆடுகளத்தில் எப்போதும் ஜாலியாக இருப்பது வீரர்களிடமிருந்து சிறப்பான ஆட்டம் விழிப்பட காரணமாக இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் ஒன்பது பந்துவீச்சாளர்களை பயன்படுத்தினேன். புதிய முயற்சிகள் எடுப்பதற்கு இதுதான் சரியான நேரம். மேலும் வேகப்பந்து வீச்சாளர்களும் வைட் யார்கர் வீசினர். இந்தப் போட்டிக்கு இது தேவையில்லாத ஒன்று என்றாலும் இனி வரும் போட்டிகளில் தேவை இருக்கலாம். அரை இறுதியில் விளையாடுவதால் நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது. நாங்கள் அந்த எதிர்பார்ப்புகளை கண்டு கொள்ளப் போவதில்லை. எங்களுடைய இலக்கு அணியின் வெற்றி. அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வெற்றியின் பாதையில் பயணத்தை தொடர விரும்புகிறோம் என தெரிவித்தார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles