கவலைப்படாதீங்க.. நமக்கு திரும்ப விராட் கோலி கிடைச்சுட்டாரு.. இந்த உலகக் கோப்பையை இவர் வாங்கித் தருவாரு – இர்பான் பதான் பேச்சு

இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் விராட் கோலி செய்து வந்த ரோலை ஒரு முக்கியமான வீரர் எடுத்துக்கொண்டு செயல்பட்டுக் கொண்டிருப்பதாக இந்திய முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கூறியிருக்கிறார்.

- Advertisement -

கடந்த ஆசிய கோப்பை தொடரில் இறுதிப்போட்டியில் பொறுப்பை எடுத்துக் கொண்டு தனியாக விளையாடி சாம்பியன் பட்டத்தை திலக் வர்மா வென்று கொடுத்தார். எனவே இவரை அடுத்த விராட் கோலி என பலரும் சொல்லி வந்தார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் இர்பான் பதான் சில புள்ளி விவரங்களை எடுத்து வந்து வேறு ஒரு வீரரை விராட் கோலி ரோலில் வைத்து பேசியிருக்கிறார். மேலும் அவர் இன்னும் கொஞ்சம் மேலே வந்து விளையாடுவதற்கும் முயற்சி செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் பேசும் பொழுது “இந்த உலகக் கோப்பை தொடரில் சூரியகுமார் யாதவ் 119 பந்துகளை 136 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடியிருக்கிறார். மேலும் அவருடைய ஆவரேஜ் 54 என சிறப்பாக இருக்கிறது. ஆனால் அவர் பொதுவாக 150 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுவார். ஆனால் தற்போது அணிக்காக இதை மாற்றிக்கொண்டு விராட் கோலி போல விளையாடுகிறார். மேலும் அவர் ஆப்ஸ் பின்னர் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மூன்றாவது இடத்தில் வந்து விளையாடலாம்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles