2025 ஆம் ஆண்டு IPL போட்டிகள் வரும் மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இவற்றுக்கான விதிகளை IPL சேர்மேன் அருண் துமால் நேற்றைய தினத்தில் அறிவித்துள்ளார்.
சமீபத்தில் சவுதி அரேபியாவில் நடந்த IPL தொடருக்கான மெகா ஏலத்தில் பல நாட்டை சேர்ந்த முன்னணி வீரர்கள் ஏலத்தில் கலந்து கொண்டார்கள். இந்த ஏலத்தில் 182 வீரர்களை பல்வேறு அணிகள் தேர்வு செய்தது. ஏலத்தில் இந்த வீரர்கள் மொத்தமாக சம்பளமாக வாங்கிய தொடகை 639.51 கோடிகள் ஆகும்.
IPL திருவிழா ஆரம்பம்
“மார்ச் 21 ஆம் நாள் IPL போட்டிகள் துவங்க உள்ளது மேலும் தர்மசாலாவில் இந்த முறை போட்டிகளை நடத்த வாய்ப்பு உள்ளது 2 அல்லது 3 போட்டிகள் இங்கு நடக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார் அருண்.
மேலும் பேசிய அவர் “IPL தொடருக்கான முழு அட்டவணை அனைத்து அணிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசித்து விரைவில் வெளியாக உள்ளது” எனவும் அறிவித்தார்.
சென்ற முறை தர்மசாலா மைதானத்தில் 2 போட்டிகள் நடந்தன எனவும் இம்முறை குறைத்தது 3 போட்டிகள் நடத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அருண் விதிகளில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்க போவதில்லை எனவும் தெரிவித்தார்.
IPL போட்டிகள் உலக அளவில் பார்க்கபட்டும் கொண்டாடப்பட்டும் வருகிறது. அதற்கு ஏற்றவாறு சென்ற முறையை விட இம்முறை பெரிய அளவில் இருக்கும் என்றார் அருண்.
சன்சாத் கேல் மகாகும்பம் 3.0
சன்சாத் கேல் மகா கும்பம் மூன்றாவது சீசன் தொடங்க உள்ளது. இந்த தொடர் பல இளம் திறமையான வீரர்களை கண்டறிய பெரிதும் உதவி வருகிறது. இந்த தொடரை பற்றியும் பேசியுள்ளார் அருண்.
இது குறித்து அவர் பேசியது “மார்ச் வரை நடக்க இருக்கும் இந்த தொடர் 45 மாவட்டங்களை சேர்ந்த பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கியும் பல தொழில்நுட்பங்கள் மற்றும் உபகரணங்களை கொண்டு விளையாட சிறந்த தளமாக இயங்கி வருகிறது, கிராம புற மானவகளின் திறமையை வெளிக்கொண்டு வர இது போன்ற தொடர்கள் அவசியம்” என அருண் தெரிவித்தார்.
அவர் கூறியதை போலவே பல வீரர்கள் குறிப்பாக இந்திய அணியில் தற்போது விளையாடி வரும் ஜெய்ஸ்வால் மற்றும் ரின்கு சிங் போன்ற வீரர்களும் இதை போலவே கிராமத்தில் இருந்தும் ஏழ்மை நிலையில் இருந்து வந்தவர்கள் இன்று அவர்கள் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார்.

