தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 13 வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்கிறது. முதல் அணியாக இந்த வருட உலகக் கோப்பையின் அரை இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெற்றதோடு புள்ளிகள் பட்டியலிலும் முதலிடத்தில் இருக்கிறது
குறிப்பாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் இந்த உலகக்கோப்பை தொடரில் எதிரணியினருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர். முன்னதாக இங்கிலாந்து அணியுடன் ஆனால் லக்னோவில் நடைபெற்ற போட்டியில் முகமது சமீ மற்றும் பும்ரா இணைந்து ஏழு விக்கெட்டுகள் வீழ்த்தினர். நேற்றைய போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ஒன்பது விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனால் இலங்கை 55 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் அங்குள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இந்திய அணி பிசிசிஐ மற்றும் ஐசிசி ஆகியோரின் மீது பகிரங்கமான குற்றச்சாட்டு ஒன்றை வைத்து இருக்கிறார். அதாவது இந்திய அணிக்கு ஐசிசி மற்றும் பிசிசிஐ ஆகியோர் மறைமுகமாக உதவி செய்வதாகவும் அதனால்தான் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.
இது கிரிக்கெட் வட்டாரங்களில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தான் அணியின் மோசமான உலகக்கோப்பை தோல்விகள் குறித்த விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்திய அணியின் சிறப்பான விளையாட்டு பற்றி பாகிஸ்தான் அணியின் வீரர் ஒருவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருப்பது கிரிக்கெட் ரசிகர்களிலேயே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் ஒரு சிலர் இதனை நகைச்சுவையாகவும் சித்தரித்துள்ளனர்.
பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த முன்னாள் வீரரான ஹசன் ராஜா என்பவர் தான் இது போன்ற ஒரு பகிரங்க குற்றச்சாட்டை சுமத்தி இருக்கிறார். இது தொடர்பாக பேசியிருக்கும் அவர்” ஐசிசி மற்றும் நடுவர்கள் இந்திய அணிக்கு எந்த மாதிரியான பந்துகளை கொடுக்கிறார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறி இருக்கிறார். இந்திய அணி நேற்றைய போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்த மாதிரியான குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் விளக்கமாக பேசுகையில் ” முகமது சமி மற்றும் சிராஜ் ஆகியோரின் பந்துவீச்சு ஆலன் டொனால்ட் மற்றும் நீடினி ஆகியோரின் பந்துவீச்சை தென்னாப்பிரிக்காவில் வைத்து எதிர்கொள்வதைப் போன்று இருக்கிறது. வீரர்கள் மற்ற அணியுடன் விளையாடும் போது அவ்வாறு இல்லை. இந்திய அணி விளையாடும் போது மட்டும் பந்து அதிகமாக ஸ்விங் மற்றும் சீம் ஆகிறது. இது எப்படி என்று எனக்கு புரியவில்லை. குறிப்பாக பந்தின் ஒரு பகுதியில் மட்டும் பளபளப்பாக உள்ளது”என்று தெரிவித்திருக்கிறார்.
Hasan Raza feels suspicious on the balls used by Indian bowlers 👀 – "The ball is swinging and bouncing extraordinary by indian bowlers. There seems to be extra hardness and layer on those balls. ICC should investigate the balls used by indian bowlers in the WorldCup." #cwc23 pic.twitter.com/M3D45bQJ5r
— Arfa Feroz Zake (@ArfaSays_) November 3, 2023
மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” பந்து மாற்றப்படும் போது ஐசிசி அல்லது பிசிசிஐ அல்லது நடுவர்கள் இது போன்ற பந்துகளை இந்தியாவிற்கு தருகிறார்கள் என்று நான் நம்புகிறேன். இந்திய அணி பந்து வீசும் போது பயன்படுத்தப்படும் பந்துகள் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என தெரிவித்திருக்கிறார். இவரது இந்த குற்றச்சாட்டு சர்ச்சையை விட அதிகமானோருக்கு நகைச்சுவையை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது. இது தொடர்பான சமூக வலைதளப் பதிவில் கமெண்ட் செய்திருக்கும் இந்தியாவின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா இந்த நிகழ்ச்சி ஒரு முறையான நிகழ்ச்சி தானா என பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என பதிவு செய்திருக்கிறார்.

