எங்க 2 டீமுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான்.. அவங்க அந்த விஷயத்தை சரியா பண்ணாங்க.. தோல்விக்கு பின்னர் பேசிய சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ்

நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.

- Advertisement -

இதில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சு தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதன்படி குஜராத் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக சாய் சுதர்சன் மற்றும் கில் ஆகியோர் களமிறங்கினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 210 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய இவர்கள் இருவருமே சதம் விளாசிய நிலையில் சாய் சுதர்சன் 51 பந்துகளில் 5 பவுண்டரிகள், ஏழு சிக்ஸர்கள் என 103 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதற்குப் பிறகு கில் 55 பந்துகளில் ஒன்பது பவுண்டரிகள், 6 சிக்சர்கள் என 14 ரன்கள் குவித்த நிலையில் வெளியேற 20 ஓவர்களில் குஜராத் அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் குவித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பந்து வீச்சு தரப்பில் துஷார் தேஸ் பாண்டே நான்கு ஓவர்களில் 33 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

- Advertisement -

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணிக்கு 10 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழக்க அதற்கு பிறகு ஜோடி சேர்ந்த மிச்சல் மற்றும் மொயின் அலி கூட்டணி 57 பந்துகளில் 109 ரன்கள் குவித்தது. இந்த கூட்டணியை மோஹித் சர்மா பிரித்தார். 34 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் மூன்று சிக்சர்கள் குவித்த நிலையில் மிச்சல் 63 ரன்களில் வெளியேற மொயின் அலியும் 56 ரன்களில் வெளியேறினார். இதோடு சென்னை அணியின் நம்பிக்கையும் முடிவுக்கு வந்தது.

இறுதியில் எட்டு விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் மட்டுமே குவித்து 35 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பின்னர் பேசிய சென்னை அணியின் கேப்டன் ருத்ராஜ் கூறும் பொழுது
“இந்த ஆட்டத்தில் எங்களது பீல்டிங் சரியாக அமையவில்லை. 10 முதல் 15 ரன்கள் கூடுதலாக கொடுத்து விட்டோம். மேலும் கடைசி ஐந்து ஓவர்களில் சிறப்பாக பந்து வீசி குஜராத் அணியை கட்டுக்குள் கொண்டு வந்தோம்.

- Advertisement -

குஜராத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவருமே அபாரமாக விளையாடினார்கள். அவர்கள் இருவரும் விளையாடிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. இரண்டு பேட்ஸ்மேன்கள் மைதானங்களை சுற்றி சுற்றி அடிக்கும் போது அவர்களை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினமான காரியமாகும். எங்களது அடுத்த போட்டி சொந்த மைதானத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக இருக்கும்.

இதையும் படிங்க:சிஎஸ்கேவின் வெற்றியை பறித்த மோகித் சர்மா.. மிச்சல், மொயின் அலி போராட்டம் வீண்.. கடைசி நேரத்தில் ஆறுதல் அளித்த தோனி

கடினமான சூழ்நிலையில் கடினமான அணிக்கு எதிராக விளையாடியது மிகவும் சவால் அளிக்கக்கூடிய விஷயமாகும்”என்று கூறியிருக்கிறார். சென்னை அணி அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராகவும் பெங்களூர் அணிக்காகவும் மோத வேண்டி இருக்கிறது. இந்த இரு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை அணி பிளே ஆப் செல்ல முடியும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles