மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஊக்க மருந்து சோதனைக்கு ஒத்துழைக்காத காரணத்தினால் தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் காலவரையின்றி சஸ்பெண்ட் செய்துள்ளதை தொடர்ந்து மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அதற்கான காரணத்தை தற்போது விளக்கியுள்ளார்.
ஜப்பான் தலைநகரமான டோக்கியோவில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில் இந்தியாவிற்கு வெண்கல பதக்கம் வென்று பெருமை சேர்த்தவர் இந்த பஜ்ரங் புனியா. இவர் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷனுக்கு எதிராக சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார். இவர் அந்தப் போராட்டத்தில் சாக்ஷி மாலிக் மற்றும் விக்னேஷ் ஆகியோருடன் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மார்ச் 10ஆம் தேதி நடைபெற்ற ஹரியானா மாநிலம் சோனா பட்டில் நடைபெற்ற ஊக்க மருந்து சோதனைக்கு பஜ்ரங் புனியா ஊக்க மருந்து சோதனைக்கு அவரது சிறுநீரை வழங்கவில்லை. இதனால் தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் இவரை காலவரையின்றி சஸ்பெண்ட் செய்தது. இவருக்கு எதிராக அனுப்பிய கடிதத்தில் “பின் விளைவுகளை நீங்கள் ஏற்றுக் கொண்டால் மேல் முறையிட்டு உரிமைக்கு உட்பட்டு உங்களின் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் இல்லாமல் வழக்கு தீர்க்கப்படும்.
நீங்கள் இதற்கு உடன்படவில்லை என்றால் ஊக்க மருந்து எதிர்ப்பு ஒழுங்குமுறை குழுவின் தீர்ப்பதற்கு இந்த விவகாரம் பரிந்துரைக்கப்படும்” எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால் ஜூலை மாதம் பாரிஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரில் பங்கேற்பதில் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை தொடர்ந்து அதற்கான காரணத்தை தற்போது பஜ்ரங் புனியா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.
அதில் சிறுநீர் மாதிரி வழங்க நான் மறுக்கவில்லை என்றும், அவர்கள் சிறுநீர் மாதிரி பரிசோதிக்க பயன்படுத்திய கருவி காலாவதியாகி விட்ட காரணத்தினால்தான் நான் ஒத்துழைக்கவில்லை என்று கூறி இருக்கிறார். இது குறித்த அவர் விரிவாக கூறும்பொழுது
“என்னை ஊக்க மருந்து சோதனைக்கு உட்படுத்துமாறு கூறப்பட்ட செய்தியை நான் தற்போது தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனது சிறுநீர் மாதிரி நான் அதிகாரிகளிடம் கொடுக்க ஒருபோதும் மறுக்கவில்லை.
அவர்கள் கொண்டுவந்த கிட் காலாவதியாகி இருந்தது.அதற்கு அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பதற்கு முதலில் பதில் அளிக்குமாறு கேட்டுக் கொண்டேன். எனது மாதிரியை முன்னதாக எடுத்து இந்த கடிதத்திற்கு எனது வக்கீல் வித்தூஸ் சின்கானியா பதில் அளிப்பார் என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:ஹர்திக் பாண்டியா மட்டுமல்ல.. மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விக்கு இவர்களும் ஒரு காரணம்தான்.. விமர்சிக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர்
ஒலிம்பிக் தொடரில் 65 கிலோ எடை பிரிவில் இதுவரை எந்த இந்திய வீரர்களும் தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான தகுதிப் போட்டிகள் இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது. ஆனால் என்டிஏ சஸ்பெண்ட் காரணமாக பஜ்ரங் புனியா இதில் பங்கேற்க தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த காரணத்தினால் பாரிசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் இவர் பங்கேற்க சிக்கல் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

