விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக மிக தீவிரமான முறையில் பயிற்சி பெற்று விளையாடி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் அஜித் அகர்கர் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்த சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவருமே இந்திய அணியின் மூத்த சீனியர் வீரர்களாக இருக்கும் நிலையில் சமீபகாலமாக இவர்கள் இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து தடுமாறி வருகிறார்கள். எனவே ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் முடித்ததோடு ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அப்படி எதுவும் செய்யாமல் திரும்பவும் ரஞ்சி டிராபியில் விளையாட முடிவு செய்திருப்பதாகவும், மும்பை கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார்.
இந்திய அணியில் ஏற்கனவே பல இளைஞர்கள் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கும் நிலையில் ரோகித் சர்மா திரும்பவும் பயிற்சி களத்தில் குதித்து இருப்பது பல்வேறு குழப்பங்களை உண்டாக்கி இருக்கிறது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிள் தொடர் தொடங்க இன்னும் ஆறு மாத காலம் இருக்கிறது. எனவே ரோஹித் சர்மா பயிற்சி பெறும் நிகழ்வுகளை பார்த்தால் டெஸ்ட் கிரிக்கெட் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்பது போல தெரிகிறது.
இந்த சூழ்நிலையில் சமீபத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடர்கான இந்திய அணியை அறிவிப்பதற்காக செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய அணியின் தலைமை தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் ஒரு மாத காலம் இருக்கிறது. மேலும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் ஒருநாள் கிரிக்கெட்டில் நல்ல முறையிலேயே இப்போதும் விளையாடி வருகிறார்கள். எனவே இவர்களது எதிர்கால கிரிக்கெட் குறித்து கேட்கிறீர்கள். இந்த இருவரின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து மதிப்பீடு செய்வதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. இப்போது எங்களை பொறுத்தவரை நமது ஒரே இலக்கு சாம்பியன்ஸ் டிராபி தொடர் மட்டுமே. அதில் மட்டுமே தற்போது கவனம் செலுத்தி வருகிறோம்” என்று கூறியிருக்கிறார்.

