சொன்னா புரிஞ்சுக்கோங்க.. 7 மேட்ச்ல 752 ரன் அடிச்சும்.. கருண் நாயரை சாம்பியன் டிராபி அணியில் எடுக்காத காரணம் இதுதான் – அஜித் அகார்கர் விளக்கம்

ஜனவரி 18 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 அணிக்கான இந்திய அணியில் இருந்து எதற்காக கருண் நாயர் நீக்கப்பட்டார் என்ற காரணத்தை அஜித் அகர்கர் விளக்கினார்.

- Advertisement -

தற்போது விஜய் ஹசாரே டிராபியில் விதர்பாவு அணிக்காக விளையாடி வரும் கருண் நாயர் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். வெறும் 7 இன்னிங்சில், 752 சராசரியில் 752 ரன்கள் எடுத்துள்ளார். கருண் நாயரின் ஆட்டத்தைக் கண்டு சச்சின் டெண்டுல்கர் உட்பட பலரும் நாயரின் நிலைத்தன்மையைப் பாராட்டினர். ஆனாலும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இங்கிலாந்தை எதிர்கொள்ளும் போட்டிகளில் நாயரின் பெயர் இடம்பெறவில்லை.

- Advertisement -

முடிவுகளை எடுக்க கடினமாக இருந்தது:

இதனைக் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அகர்கர், “ 8 அணிகள் கொண்ட போட்டிக்கான அணியைத் தேர்வு செய்யும்போது கருண் நாயர் பரிசீலனையில் இருந்தார். முடிப்புகளை எடுக்க கொஞ்சம் கடினமாக தான் இருந்தது. 700க்கு மேல் சராசரி கொண்டதினால் அவரையும் பற்றி விவாதித்தோம்”.

- Advertisement -

எல்லாரையும் சேர்க்க முடியாது:

மேலும் அவர், “இப்போதைக்கு, இந்த அணியில் ஒரு இடத்தைப் பெறுவது மிகவும் கடினமாக இருக்கிறது. தேர்வு செய்யப்பட்ட வீரர்களை பாருங்கள். அவர்களின் சராசரி அனைத்தும் 40க்கு மேல் உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, 15 பேர் கொண்ட அணியில் எல்லோரையும் சேர்க்க முடியாது.

ஆனால் நன்றாக விளையாடும் வீரர்களின் செயல்திறன்கள் கண்டிப்பாக தலைமை செயலாளரின் கவனத்தை ஈர்க்கும். ஏதாவது ஒரு வீரருக்கு காயம் அல்லது மோசமான ஃபார்ம் இருந்தால் கருண் நாயரின் பெயர் என்றும் விவாதத்தில் இருக்கும்” என்று தெரிவித்தார், அஜித் அகர்கர்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles