2வது டெஸ்ட் தொடங்கும் முன்பே.. இந்திய டீமிலிருந்து வெளியே அனுப்பப்பட்ட நட்சத்திர வீரர்.. வெளிவந்துள்ள தகவல்.. காரணம் என்ன?

பங்களாதேஷ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இதில் சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியை இந்தியா வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூர் நகரில் வருகின்ற 27ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதற்காக இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணியின் வீரர்கள் கான்பூர் சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

- Advertisement -

கான்பூர் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு 3 நாட்கள் இருக்கும் நிலையில் இந்திய அணியில் இருந்து முக்கிய வீரர் விடுவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரரான சர்பராஸ் கான் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகி இருக்கிறது. அவ்வாறு விடுவிக்கப்பட்டால் சர்பராஸ் கான் மும்பை அணிக்காக இராணி கோப்பையில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

மும்பையைச் சேர்ந்த இளம் வீரரான சர்பராஸ் கான் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடியதை தொடர்ந்து இந்த வருட தொடக்கத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தேர்வு செய்யப்பட்டார். அந்தத் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் களம் இறங்கிய அவர் 2 இன்னிங்ஸ்களிலும் அரை சதம் எடுத்தார். மேலும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் சர்பராஸ் கான் சிறப்பாக விளையாடி மீண்டும் ஒரு அரை சதத்தை எட்டினார்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சர்பராஸ் கான் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அனுபவம் வாய்ந்த சீனியர் வீரர்களுடன் களம் இறங்கி வெற்றி பெற்றது. மேலும் அடுத்தடுத்து முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் தொடர்கள் இருப்பதால் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் பெரும்பாலும் சீனியர் வீரர்கள் களம் இறக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

மேலும் இதே நேரத்தில் இராணி கோப்பை போட்டி நடைபெற இருப்பதால் அந்தப் போட்டியில் விளையாட சர்பராஸ் கான் இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டால் அந்தத் தொடருக்கு தயாராகும் வகையில் அவருக்கு இராணி போட்டியில் விளையாடிய பயிற்சி அமையும். இதனை கருத்தில் கொண்டு இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர், சர்பராஸ் கானை இந்திய அணியிலிருந்து விடுவிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

- Advertisement -

ரஞ்சி கோப்பை சாம்பியனான மும்பை அணி மற்றும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இராணி கோப்பை போட்டியில் விளையாட இருக்கிறது. இந்தப் போட்டி வருகின்ற அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்கி ஐந்தாம் தேதி முடிவடைய இருக்கிறது. இந்தப் போட்டி உத்தர பிரதேச மாநில தலைநகரான லக்னோ நகரில் அமைந்துள்ள அடல் பிகாரி வாஜ்பாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறும் கான்பூர் நகரில் இருந்து ஒரு மணி நேரத்தில் லக்னோ நகரை அடைந்து விடலாம் என்பதால் டெஸ்ட் போட்டி ஆரம்பிக்கப்பட்ட பிறகு சர்ப்ராஸ் கான் விடுவிக்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அணியின் சீனியர் வீரர்கள் யாருக்கும் காயம் ஏற்படாத பட்சத்தில் இராணி கோப்பையில் பயிற்சி பெறும் பொருட்டு சர்பராஸ் கானை அஜித் அகர்கர் விடுவிப்பார் என தகவல்கள் தெரிவிக்கிறது. அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்க இருக்கும் இராணி கோப்பை போட்டியில் மும்பை அணிக்காக அஜிங்கியா ரகானே, சூரியகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சார்தூல் தாகூர் ஆகியோர் விளையாட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles