இந்திய அணியில் எப்பவும் இதை நான் செஞ்சது இல்லை.. இந்த ஒரு விஷயத்தில் மட்டும் கவனமா இருப்பேன் – ஹர்திக் பாண்டியா பேட்டி

இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா 2016ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்காக அறிமுகமாகி விளையாடி வருகிறார்.

- Advertisement -

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ள நிலையில் அதற்கு முன்னதாக சில முக்கிய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

ஹர்திக் பாண்டியா இதுவரை இந்திய அணிக்காக 114 டி20 போட்டிகள் 86 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 11 டெஸ்ட் போட்டிகள் என விளையாடி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறார். எப்போதெல்லாம் இந்திய அணிக்கு பிரச்சனை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் தனது பேட்டிங் அல்லது பந்துவீச்சு என ஏதாவது ஒரு பங்களிப்பின் மூலம் அணிக்கு தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட அவருக்கு இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தனக்காக தான் விளையாடுவதை விட நாட்டுக்காக விளையாடுவதையே எப்போதும் விரும்புவதாகவும் இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றால் அதிக எதிர்பார்ப்பு இருக்கும் என சில முக்கியமான கருத்துக்களை பேசி இருக்கிறார்.

இதுகுறித்து ஹர்திக் பாண்டியா விரிவாக கூறும்போது ” நான் எப்போதுமே ஹர்திக் பாண்டியா என்கிற தனி ஒரு மனிதனுக்காக விளையாடுவதில்லை. எனக்கு முதலில் இந்திய அணி தான் முக்கியம். அணியின் நலனுக்காக விளையாடுவதையே நான் எப்போதும் விரும்புகிறேன். நாம் இரண்டு பந்துகளில் விளையாடுகிறோமா அல்லது 60 பந்துகளில் விளையாடுகிறோமா என்பது முக்கியமில்லை.

- Advertisement -

இதையும் படிங்க:இந்திய அணியில் இருந்து ஓய்வா.?இதை நான் பல தடவை பார்த்துட்டேன்.. எனது பதில் இதுதான் – ரோஹித் சர்மா பேட்டி

எத்தனை பந்துகள் விளையாடினால் அது இந்திய அணி வெற்றி பெறும் என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். மேலும் தன்னால் பும்ரா போன்று சிறப்பாக பந்து வீச முடியாவிட்டாலும் அணிக்குத் தேவையான சூழ்நிலைகளில் விக்கெட்டுகளை எடுப்பதில் ஆர்வமாக இருக்கிறேன். எனவே எனது தனிப்பட்ட நலனை விட நாட்டின் நலனே முக்கியம். மேலும் இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே அது எப்போதுமே ஆக்ரோஷமாக இருக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை” என்று ஹர்த்திக் பாண்டியா பேசியிருக்கிறார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஹர்திக் பாண்டியா விளையாட உள்ள நிலையில் அது இந்திய அணிக்கு பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. மேலும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் கலக்கக்கூடிய ஆல்ரவுண்டர் அணிக்கு கிடைத்திருப்பதால் இது இந்திய அணிக்கு நல்ல விஷயமாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles