358 ரன் அடிச்சும் நாங்க தோப்போம்னு எனக்கு முன்னாடியே தெரியும்.. அதுக்கு காரணமே இதுதான் – கேஎல் ராகுல் பேட்டி

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 358 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்திருந்த போதிலும் அதனை தென்னாப்பிரிக்க அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்த தோல்வி குறித்து இந்திய கேப்டன் கே எல் ராகுல் கூறும்போது “358 ரன்கள் அடித்தும் தோல்வி அடைந்து விட்டோம் என்பது எனக்கு வலியை ஏற்படுத்தவில்லை. அதற்கு முக்கிய காரணம் இந்த ஆடுகளத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்று எங்களுக்கு முன்பே தெரியும். அதற்கு தகுந்தவாறு நடுவர்கள் எங்களுக்கு சில ஒத்துழைப்புகளை வழங்கினார்கள். அடிக்கடி பந்துகளை மாற்றி எங்கள் சிரமத்தை வெகுவாக குறைத்தார்கள்.

- Advertisement -

இருப்பினும் இன்னும் நாங்கள் சில விஷயங்களில் முன்னேற வேண்டும். ஃபீல்டிங்கில் சில காட்சிகள் கோட்டை விட்டோம். மேலும் கூடுதலாக 25 ரன்கள் அடித்திருந்தால் போட்டி வேறு மாதிரியானதாக இருந்திருக்கலாம். எனவே நாங்கள் இது மாதிரியான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்டார்கள். மேலும் பாசை இழந்தது இந்த போட்டியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது, நான் இரண்டு முறை டாஸ் தோற்று இருக்கிறேன்” என்று அவர் பேசியிருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles