அறிமுகப் போட்டியிலேயே பிரம்மாண்ட சாதனை.. இப்படி ஒரு நிகழ்வை எந்த இந்திய பவுலரும் செஞ்சது இல்லை.. ஹர்ஷிதா ராணா அபாரம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கிய ஹர்ஷித் ராணா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -

இதன் மூலமாக எந்த ஒரு இந்திய பவுலரும் செய்யாத சாதனையை ஹர்ஷித் ராணா இன்று படைத்திருக்கிறார்.

- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது அறிமுக போட்டியில் களம் இறங்கிய ஹர்ஷித் ராணா தொடக்கத்தில் ரன்கள் விட்டுக் கொடுத்தாலும் அதற்குப் பிறகு சிறப்பாக மீண்டு வந்து மூன்று முக்கிய விக்கெட்டுகள் கைப்பற்றினார். இவரது சிறந்த பந்துவீச்சு காரணமாக இங்கிலாந்து அணி சரிவை நோக்கி சென்று முதல் போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது. இதன் மூலமாக ராணா மூன்று வடிவத்தொடரிலும் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியிருக்கிறார்.

- Advertisement -

அதுவும் மூன்று மாத இடைவெளிக்குள் மூன்று வடிவ கிரிக்கெட் தொடரிலும் அறிமுகமாகி மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றி இருப்பது எந்த ஒரு இந்திய பவுலருமே இதுவரை செய்யாத ஒரு சாதனையாக இது பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஹர்ஷித் ராணா அதில் 48 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

அடுத்ததாக 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமாகி 33 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். அதற்குப் பிறகு தற்போது இதே இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகி 53 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இது இதற்கு முன்பாக எந்த ஒரு இந்திய வீரரும் செய்யாத சாதனையாக உள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க:இன்னிக்கி கடைசி நிமிஷத்துல கோலி வெளிய போய், எனக்கு வாய்ப்பு கிடைச்சது.. ஐயரின் நிரந்தர இடத்தைப் பரிக்கிறாரா கம்பீர் ? ஃபீல் செய்து பேசிய ஐயர்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடாத சூழ்நிலை ஏற்பட்டால், அவருக்கு பதிலாக ஹர்ஷித்ரானா மாற்றுவீரராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரை தயார் நிலையில் வைத்திருக்கவே இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் அவருக்கு பயிற்சி போட்டியாக அமையும் வகையில் இருக்கிறது. எனவே பும்ரா விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா களமிறங்குவார் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் மற்றொரு முக்கிய ஆப்சனாக முகமது சிராஜ் இருப்பதால் இந்த இருவரில் இந்திய அணி எந்த வீரரை தேர்வு செய்யும் என்பதில் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இருப்பினும் இந்தத் தொடரில் ஹர்ஷித்ராணா நன்றாக செயல்பட்டால் அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று தெரிகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles