தவிடு பொடியாக்கிய இந்தியா.. 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.. ஜிம்பாவே அணியை வீழ்த்தியது

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

முதல் போட்டியில் இந்திய அணி அடைந்த மோசமான தோல்விக்கு ஜிம்பாப்வே அணிக்கு தற்போது தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறது.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கியதன் விளைவாக இந்தியா 20 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் கேப்டன் கில் விரைவாக வெளியேறினாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா சிறப்பாக விளையாடி பௌண்டரிகளும் சிக்ஸருமாக அடித்து நொறுக்கினார்.

- Advertisement -

33 பந்துகளை எடுத்துக்கொண்டு அரைசதம் அடித்த நிலையில், அடுத்த 13 பந்துகளில் மற்றொரு 50 ரன்கள் கடந்து 46 பந்துகளில் 100 ரன்கள் குவித்து வெளியேறினார். அதற்குப் பிறகு ருத்ராஜ் மற்றும் ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி இந்திய அணி சவாலான ரன்களை நிர்ணயிக்க உதவி செய்தனர். ருத்ராஜ் 77 ரன்களும், ரிங்கு சிங் 48 ரன்களும் குவித்தனர். இதனால் இந்திய அணி 20 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் குவித்தது.

இதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கி விளையாடிய ஜிம்பாப்வே அணி தொடக்க ஆட்டக்காரர் கியா நான்கு ரன்களில் வெளியேறினாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மதிவேர் 39 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 43 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு களம் இறங்கிய பென்னட் அதிரடியாக விளையாடி 9 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 26 ரன்கள் குவித்த நிலையில் வெளியேறினார்.

- Advertisement -

அதற்குப் பிறகு 5 விக்கெட்டுகள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேற, கேப்டன் சிக்கந்தர் ராசா நான்கு ரன்கள் ஏமாற்றம் அளித்தார். அதற்குப் பின்னர் ஜாங்வே 26 பந்துகளில் 33 ரன்கள் குவிக்க ஜிம்பாப்வே அணி ஓரளவு சொல்லிக் கொள்ளும்படி ரன்களை குவித்தது. இறுதியாக ஜிம்பாப்வே அணி 19வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே குவித்து நூறு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதையும் படிங்க:அடித்து நொறுக்கிய இந்தியா.. அபிஷேக் ஷர்மா அபார சதம்.. ஜிம்பாப்வே அணிக்கு மிகப்பெரிய ரன்கள் இலக்கு

இதன் மூலம் முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இந்திய அணி ஆறுதல் வெற்றியை தற்போது தேடியுள்ளது. இன்னும் மீதி 3 போட்டிகள் இருக்கும் வேளையில் தொடரை கைப்பற்ற இந்த இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது போட்டி வருகிற புதன்கிழமை இந்த இரண்டு அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles