நெதர்லாந்தை வைத்து தென் ஆப்பிரிக்காவுக்கு திட்டம் போட்ட கம்பீர்.. 2 வீரர்களை மாற்றி புதிய திட்டம்.. மாறிய நிலவரம்

இன்று டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நெதர்லாந்து அணிக்கு எதிராக விளையாடுகிறது. இன்றைய போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்திருக்கிறது. இரண்டாவதாக பந்து வீசும் பொழுது பனிப்பொழிவு இருக்கும் என்பது தெரிந்தாலும் இந்திய அணி இந்த முடிவை எடுத்திருக்கிறது. இதற்கான காரணம் குறித்து இந்திய அணியின் கேப்டன் சூரிய குமார் யாதவ் பேசியிருக்கிறார்.

- Advertisement -

மிக முக்கியமாக குஜராத் அகமதாபாத் மைதானத்தில் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது. எனவே இறுதிப் போட்டியில் பனிப்பொழிவில் பந்து வீச வேண்டியது வரலாம் என்பதற்காக முன்கூட்டி இந்த முடிவை எடுத்திருப்பதாக சூரியகுமார் யாதவ் விளக்கம் அளித்திருக்கிறார். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய அணி நிர்வாகம் இந்த முடிவை எடுத்து இருப்பதாக தெரிகிறது. இதே போல 2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இதே மைதானத்தில் இந்திய அணி இரண்டாவது பந்து வீசி ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்தது.

- Advertisement -

மேலும் அடுத்த சுற்றில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இதை மனதில் வைத்து இந்த முறை அக்சர் படேல் இடத்திற்கு ஆப் ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. நெதர்லாந்து போட்டி மிக முக்கியம் இல்லை என்பதால் கம்பீர் தென்னாபிரிக்காவுக்கு எதிரான திட்டங்களை இந்த போட்டியிலேயே கொண்டு வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles