2வது டெஸ்ட்.. இந்திய அணியின் மாஸ் பிளேயிங் XI.. பும்ரா ஓய்வு.. மேஜிக் பவுலர் வருகை.. உத்தேச பட்டியல்

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை கான்பூர் நகரில் வைத்து நடைபெற இருக்கிறது.

- Advertisement -

மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. பங்களாதேஷ் அணியுடன் விளையாடும் 1 டெஸ்ட் போட்டி தவிர நியூசிலாந்து அணியுடன் 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாட இருக்கிறது. தொடர்ச்சியாக இந்தியா அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருப்பதால் வீரர்களின் உடற் தகுதி மற்றும் காயங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதும் அணி மேலாண்மைக்கு முக்கிய பொறுப்பாக இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் பங்களாதேஷ் அணியுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ராவிற்கு ஓய்வு வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அவரது பந்துவீச்சு இந்திய அணிக்கு முக்கியமானதாக அமையும். மேலும் அவரது உடற் தகுதி மற்றும் இந்திய அணி விளையாட இருக்கும் டெஸ்ட் போட்டியில் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இரண்டாவது டெஸ்டில் அவருக்கு ஓய்வு வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

2022 ஆம் வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பைக்கு முன்பாக காயம் காரணமாக இந்திய அணியிலிருந்து ஜஸ்பிரீத் பும்ரா விலகினார். மேலும் இந்த காயத்தினால் முதுகில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் கிட்டத்தட்ட 10 மாதங்கள் ஓய்வில் இருந்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டிகளில் மீண்டும் களம் இறங்கிய பும்ரா 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியிலும் இந்திய அணி இறுதிப் போட்டி வரை தகுதி பெற முக்கிய பங்காற்றினார்.

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியை இந்தியா வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்த பும்ரா உலகக்கோப்பையின் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார். சமீபத்தில் நடந்து முடிந்த சென்னை டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளராக திகழ்ந்து வரும் அவரை காயங்களில் இருந்து பாதுகாத்து முக்கியமான போட்டிகளில் மட்டும் இந்திய அணி களம் இறக்கி வருகிறது.

- Advertisement -

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில் இரண்டாவது போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் அல்லது யாஸ் தயாள் களம் இறக்கப்படலாம் என இந்திய அணிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்ற சென்னை மைதானம் வேக பந்துவீச்சிக்கு சாதகமாக இருந்தது. ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறும் கான்பூர் மைதானம் சுழல் பந்துவீச்சிக்கு சாதகமாக இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இதன் காரணமாக பும்ராவிற்கு பதிலாக குல்தீப் யாதவ் களம் இறக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் உத்தேச வீரர்கள்: ரோஹித் சர்மா(கேப்டன்), யசஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஆகாஷ் தீப், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles