நாளைக்கு மாற்றப்பட்ட இந்தியா பாக் போட்டி.. நாளையும் மழை பெய்தால் என்ன நடக்கும்.?.. ரூல்ஸ் என்ன சொல்கிறது.?

தற்போது நடைபெற்று வரும் 2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை போட்டிகளின் சூப்பர் ஃபோர் சுற்றில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டி இலங்கையின் தலைநகரான கொழும்பில் வைத்து நடைபெற்றது.

- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே செப்டம்பர் இரண்டாம் தேதி நடைபெற இருந்த போட்டி மழையினால் கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சூப்பர் ஃபோர் சுற்றில் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை இன்று எதிர்கொண்டது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார் .

- Advertisement -

பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்த இந்திய அணியின் துவக்க வீரர்கள் இந்த முறை மிகச் சிறப்பாக விளையாடி அரை சதம் எடுத்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப்பாக 121 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ரோகித் சர்மா 55 ரன்கள் எடுத்து சதாப்கான் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்த ஓவரில் கில் 58 ரன்களில் ஷாஹிம் ஷா அப்ரிதி பந்துவீச்சில் அவுட் ஆனார் .

- Advertisement -

இதனைத் தொடர்ந்து கேஎல். ராகுல் மற்றும் விராட் கோலி இருவரும் இணைந்து மேற்கொண்டு விக்கெட் விழாதவாறு நிதானத்துடன் ஆடினர். இந்தியா 24.1 ஓவரில் 147 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. விராட் கோலி 8 ரன்கள்டனும் ராகுல் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். கன மழை பெய்ததால் மீண்டும் போட்டி துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து மழை நின்ற பின் மைதானத்தை சீரமைக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும் நடுவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மைதானத்தின் தன்மையை ஆய்வு செய்து வந்தனர். போட்டியின் போது வீரர்களுக்கு காயம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் நடுவர்களும் இரண்டு அணி நிர்வாகிகளும் மிகுந்த கவனத்துடன் இதை எதிர்கொண்டனர்.

- Advertisement -

இந்நிலையில் ஆடுகள பரிசோதனைகள் முடிந்து 9:00 மணிக்கு போட்டி துவங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் 8:30 மணி அளவில் மீண்டும் மழை குறுக்கிட்டதால் போட்டி ரிசர்வ் டே-யான நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் இந்த போட்டியானது இன்று விட்ட இடத்தில் இருந்து துவங்கும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய அணி 147 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழந்ததிலிருந்து நாளை மீதம் இருக்கும் 25.5 பந்துகளை விளையாடும்.

ரிசர்வ் டே அன்று நடைபெறும் போட்டியானது இன்றைய போட்டி எண் தொடர்ச்சியாகவே இருக்கும். இதற்கு முன்பு 1999 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஆன லீக் போட்டி ரிசர்வ் டே-ல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் சுற்று போட்டிகள் மழையால் தடை பட்ட நிலையில் சூப்பர் ஃபோர் சுற்று போட்டிகளுக்கு ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் நாளையும் மழை தொடர்ந்தால் இந்தப் போட்டியும் கைவிட்டதாக அறிவிக்கப்படும். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விதிகளின்படி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் புள்ளிகளை பகிர்ந்து கொள்ளும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles