நடந்து முடிந்த 2021 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளில் ஆஸ்திரேலியா ஆறாவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றது. கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற உலகக் கோப்பையின் இறுதி போட்டியில் இந்திய அணியை ஆரம்பிக்கட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்தியா 240 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் 10 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்ற இந்திய அணி துரதிஷ்டவசமாக உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்து சாம்பியன் பட்டம் பெரும் வாய்ப்பையும் இழந்தது.
இந்திய அணியின் தோல்வி குறித்து பல்வேறு கிரிக்கெட் பிரபலங்களும் தங்களது கருத்துக்களை பதிவு செய்திருந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அப்துல் ரசாக் இந்தியாவின் தோல்வி குறித்து மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்திருக்கிறார். இதற்கு முன்பு உலகக்கோப்பை தொடர் நடைபெறும் போது பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு உதாரணம் கூறுவதற்காக பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பற்றி தவறாக சுட்டிக்காட்டி சர்ச்சையில் சிக்கிக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்திய அணியின் தோல்வி குறித்து பேசி இருக்கும் இவர் இந்திய அணியின் தோல்வி கிரிக்கெட்டுக்கு நல்லது என சர்ச்சைக்குரிய வகையில் தனது கருத்தை பதிவு செய்து இருக்கிறார். இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய நாள் முதலே பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் ஏதேனும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பந்துகள் மற்றும் ஆடுகளங்களை ஐசிசி மற்றும் பிசிசிஐ இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் வகையில் பயன்படுத்துகிறது எனவும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து பேசி இருக்கும் அப்துல் ரசாக் ” இந்திய அணி உலக கோப்பையின் இறுதிப் போட்டியில் தோற்றது கிரிக்கெட்டுக்கு நல்லது. இந்தப் போட்டியில் இந்தியா தோற்றதால் கிரிக்கெட் ஜெயித்திருக்கிறது. ஒருவேளை இந்தியா வெற்றி பெற்றிருந்தால் அது கிரிக்கெட் விளையாட்டிற்கு மோசமான ஒரு தருணமாக அமைந்திருக்கும். கிரிக்கெட் ஆடுகளத்தில் தைரியமான முடிவு எடுப்பவர்களையும் சிறப்பாக செயல்படுபவர்களையும் என்றுமே வெற்றி பெறச் செய்யும் என்பது இந்தியாவின் தோல்வியின் மூலம் நிரூபணம் ஆகியிருக்கிறது” என்று தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” ஆடுகளங்கள் இரண்டு அணிகளுக்கும் சாதகமாக இருக்க வேண்டும். ரசிகர்களின் ஆதரவும் இரண்டு அணிகளுக்கும் சமமாக இருக்க வேண்டும். அதுதான் சரிசமமான போட்டியாக இருக்கும். ஆனால் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் இந்தியா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தது. ஒருவேளை இறுதிப் போட்டியில் விராட் கோலி சதம் அடித்திருந்தால் இந்திய நிச்சயமாக வெற்றி பெற்றிருக்கும். அது கிரிக்கெட் இருக்கு மோசமான ஒரு தருணமாக அமைந்திருக்கும். தற்போது இந்தியா தோல்வியடைந்து இருப்பதால் கிரிக்கெட்டிற்கு நல்லது நடந்திருக்கிறது” என பாகிஸ்தானில் நடைபெற்ற டிவி நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருக்கிறார் அப்துல் ரசாக்.
உலகக்கோப்பைக்குப் பின்பு இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து இன்று விளையாட இருக்கிறது. அடுத்த வருடம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் உலக டி20 போட்டிகளுக்கு தயாராகும் வகையில் இந்தத் தொடர் இடம் பெற்று இருக்கிறது. பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டி தொடரில் விளையாட இருக்கிறது.

