ப்ளீஸ் சும்மா இருங்கப்பா.. அபிஷேக் பத்தி கவலைப்படறவங்களை நினைச்சு எனக்கு கவலையா இருக்கு – சூரியகுமார் யாதவ் கருத்து

நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் நாளை இந்திய அணி இரண்டாவது சுற்றில் தனது முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து குஜராத் அகமதாபாத் மைதானத்தில் விளையாட இருக்கிறது. இந்த நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் தற்போதுஅபிஷேக் சர்மா பேட்டிங் ஃபார்ம் குறித்து கவலைப்படுபவர்களை நினைத்து தனக்கு கவலையாக இருக்கிறது எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இதுவரையில் அபிஷேக் ஷர்மா ஒரு ரன் கூட எடுக்காமல் இருந்து வருகிறார். மேலும் அவர் தொடர்ந்து மூன்று போட்டிகளில் டக்அவுட் ஆகி மோசமான சாதனையை உண்டாக்கி இருக்கிறார். எனவே அவர் தொடர்ந்து விளையாட வைக்கப்படுவாரா? என்ற அளவுக்கு கேள்விகள் உருவாகியுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து இந்திய கேப்டன் சூரியக்குமார் யாதவ் வித்தியாசமான முறையில் பதில் அளித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுபற்றி கேப்டன் சூரியகுமார் யாதவ் கூறும்பொழுது “இங்கே பாருங்கள் எனக்கு அபிஷேக் ஷர்மா பேட்டிங் பார்ம் பற்றி கவலைப்படுபவர்களை குறித்துதான் கவலையாக இருக்கிறது. அவர் எதிர்கொள்ளப் போகும் அணிகள் குறித்துதான் நான் யோசிக்கிறேன். அவர் ரன் அடித்தால் என்ன நடக்கும் என நமக்கு எல்லோருக்கும் தெரியும். நாம் ஏற்கனவே அதை பார்த்திருக்கிறோம். அவர் எப்போதும் அதிரடியாகவே விளையாட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதனால் இப்படி நடப்பது சகஜமான விஷயம். கடந்த வருடம் அவர் எங்களை காப்பாற்றினார்; இந்த முறை நாங்கள் மொத்தமாக சேர்ந்து அவரைக் காப்பாற்றுவோம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles