எங்கள் பவுலர்கள் இதில் சொதப்பி விட்டனர்.. ஹெட்டுக்கு நாங்க இந்த பிளான் வச்சிருந்தோம் – இந்திய பவுலிங் கோச் பேட்டி

இந்தியா கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்தப் போட்டியிலும் ஆஸ்திரேலியா அணி வீரர் ட்ராவிஸ் ஹெட் சதம் அடித்து இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் பந்து வீச்சு திட்டம் குறித்து சில கருத்துக்களை கூறுகிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிற நிலையில் முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றி பெற்றன. இந்த சூழ்நிலையில் இந்த இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கபா மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் ஆட்டம் பாதியுடன் நிறுத்தப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்மித் ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள். 160 பந்துகளை எதிர்கொண்ட ஹெட் 18 பவுண்டரிகளோடு 152 ரன்களும், 190 பந்துகளை எதிர்கொண்ட ஸ்மித் 101 ரன்கள் குவிக்க ஆஸ்திரேலியா அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 405 ரன்கள் குவித்திருக்கிறது. ட்ராவிஸ் எப்போதுமே இந்திய அணிக்கு தொடர்ச்சியான நெருக்கடி கொடுத்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு எதிரான பந்துவீச்சு திட்டம் குறித்து இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் ஆன மோர்னே மோர்கல் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “நாங்கள் இந்த போட்டியில் 50 முதல் 80 ஓவர்கள் வரை நன்றாக பந்து வீசி இருக்க வேண்டும். முதல் செஷனில் நன்றாக வீசி இருந்தோம். பந்து தேய்ந்த பிறகு ஸ்மித் மற்றும் ஹெட் ஆகியோர் ஒரு பார்ட்னர்ஷிப் உருவாக்கினார்கள். எங்களிடம் விளையாட்டு திட்டங்கள் இருந்தன. ஆனால் அதை நாங்கள் சரியாக செயல்படுத்தினோமா என்பது தான் கேள்வி. ஹெட்டுக்கு எப்படி பந்து வீச வேண்டும் என்ற திட்டம் எங்களிடம் இருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க:தம்பிகளா ஒன்னும் பயப்பட வேணாம்.. எங்க டிராவிஸ் ஹெட்டை அவுட் ஆக்க இத மட்டும் பண்ணுங்க போதும்- இந்திய பவுலர்களுக்கு கில்கிறிஸ்ட் அறிவுரை

எங்கள் பந்துவீச்சாளர்கள் தனிப்பட்ட பலத்திற்கு திரும்ப வேண்டியது அவசியம். ஹெட் உள்ளே வந்த பிறகு நாங்கள் தவறு செய்வதற்கான வாய்ப்புகள் குறைகிறது. நாங்கள் 50 ஓவர்கள் தாண்டிய பிறகு சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். ஹெட் தொடர்ந்து இதே போன்ற செயல்படும் நிலையில் நாங்கள் எங்கள் திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டுமா? அல்லது இதே திட்டத்தில் தொடர வேண்டுமா? என்பது குறித்து இன்னும் ஒரு சில தினங்களில் முடிவு செய்வோம்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles