இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் தொடரில் இந்தியாவும் இரண்டாம் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்று இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையை பெற்றுள்ளன. மூன்றாவது டெஸ்ட் தொடரானது பிரிஸ்பேனில் டிசம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் டிராவிஸ் ஹெட்டின் அச்சுறுத்தலை இந்தியா எவ்வாறு சமாளிக்க முடியும் என்பதே முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் பரிந்துரைத்துள்ளார்.
இந்திய அணியை விட நியூசிலாந்து அணி திறம்பட செய்தது:
ஆடம் கில்கிறிஸ்ட் SEN கிரிக்கெட் ஒன்றில் கூறியதாவது, “இந்தியா மற்றும் டிராவிஸ் ஹெட் இடையேயான போட்டியானது பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும். இந்திய அணி அவருக்கு எதிராக ஷார்ட் பீட்ச் பந்துவீச்சு யுக்தியை ஏன் பயன்படுத்தவில்லை என்பதையே என்னால் நம்ப முடியவில்லை.
ஒருவேளை அவர்கள் அதை பயன்படுத்தி இருந்தால், அவர் சில ரன்களிலே வெளியேறி இருப்பார். ஆனால், இந்த யுக்தியை நியூசிலாந்து அணி திறம்பட பயன்படுத்தியதை நான் பார்த்துள்ளேன்”.
பேட்ஸ்மேன்களை திணற வைக்க வேண்டும்:
மேலும் அவர் கூறுகையில், முக்கியம் என்னவென்றால், உங்கள் திட்டங்களை தெளிவாக அமைத்து, அந்த பேட்ஸ்மேனிடம் அழுத்தத்தை உருவாக்கி, அவர்களை உருக்குலைக்க வேண்டும், இவ்வாறு பண்ணும்பொழுது அவர்கள் ரிஸ்க்கை எடுத்து அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பார்கள்” என தனது ஆலோசனை கூறியுள்ளார், ஆடம் கில்கிறிஸ்ட்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 141 பந்துகளில் 140 ரன்கள் எடுத்து, இந்திய அணி படுதோல்வி அடைவதற்கு டிராவிஸ் ஹெட் முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

