161 ரன்.. மும்பையின் புது ராஜா சூரியகுமார் மெகா சாதனை.. தனி ஆளாக போராடி இந்திய அணிக்கு வெற்றி.. யுஎஸ்ஏ தோல்வி

இன்று மும்பை வான்கடை மைதானத்தில் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் அமெரிக்க அணிக்கு எதிராக விளையாடியது. இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மோசமாக சொதப்பிய நிலையில், கேப்டன் சூரியகுமார் யாதவியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பெற்றிருக்கிறது.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பந்து பேசியது. இந்திய அணியில் பும்ரா காயம் காரணமாக இடம் பெறவில்லை. இரண்டு வருடங்களுக்குப் பிறகு முகமது சிராஜ் இந்திய டி20 அணிக்கு திரும்பி வந்தார்.

- Advertisement -

இந்திய அணியில் அபிஷேக் ஷர்மா கோல்டன் டக், இஷான் கிஷான் 20, திலக் வர்மா 25, சிவம் துபே கோல்டன் டக், ரிங்கு சிங் 6, ஹர்திக் பாண்டியா 5, அக்சர் படேல் 14 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். கேப்டன் சூரியகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி 49 பந்தில் 84 ரன்கள் எடுக்க இந்திய அணி தப்பித்தது. இறுதியாக 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இதைத் தொடர்ந்து விளையாடிய அமெரிக்க அணிக்கு மிடில் ஆர்டரில் மிலிந்த் குமார் 34 பந்தில் 34 ரன்கள், சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி 31 பந்தில் 37 ரன்கள், சுபம் ரஞ்சனே 22 பந்தில் 37 ரன்கள் என தாக்குப்பிடித்து விளையாடினார்கள். மற்ற அனைவரும் சொற்ப ரன்னில் வெளியேறினார்கள்.

அமெரிக்கா அணி இறுதியாக 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய பந்துவீச்சில் முகமது சிராஜ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 16 முறை ஆட்டநாயகன் விருது வாங்கி விராட் கோலி முதல் இடத்தில் இருந்தார். இந்த நிலையில் இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது வாங்கிய சூரியகுமார் விராட் கோலியை தாண்டி முதலிடத்தை பிடித்து சாதித்திருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles