17.5 ஓவர்.. தமிழக வீரர் வருண் சுழலில் மாட்டிய தென் ஆப்பிரிக்கா அணி.. சஞ்சு சாம்சன் வரலாற்று சதத்தால் இந்தியா அபார வெற்றி

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடும் போட்டி தொடரின் முதலாவது டி20 போட்டி தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் இன்று தொடங்கியது.

- Advertisement -

2024 ஆம் வருட டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை பரபரப்பான இறுதிப் போட்டியில் வீழ்த்தியது. இதற்கு பலி தீர்க்கும் விதமாக தென்னாப்பிரிக்க அணி இந்தத் தொடரை அணுகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர். எனினும் அபிஷேக் ஷர்மா ஏழு ரன்களில் ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து கேப்டன் சூரியகுமார் யாதவ் சஞ்சு சாம்சுனுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சிதறடித்தது. குறிப்பாக அதிரடியாக விளையாடிய சாம்சன் சர்வதேச t20 போட்டிகளில் தனது மூன்றாவது அரை சதத்தை பதிவு செய்தார். இவருக்கு உறுதுணையாக விளையாடிய கேப்டன் சூரியகுமார் யாதவ் 21 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதன் பிறகு ஜோடி சேர்ந்த திலக் வர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் அதிரடியாக விளையாடி இந்திய அணியின் ரன்கள் வேகமாக உயர காரணமாக அமைந்தனர். இந்தப் போட்டியில் பவுண்டரிகளும் சிக்ஸர்களும் பறக்க விட்ட சாம்சன் சர்வதேச t20 போட்டிகளில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக இரண்டு சதங்கள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் சஞ்சு சாம்சன்.

இவருடன் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த திலக் வர்மா 18 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 33 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 10 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 107 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவரது விக்கெட் பிறகு ஹர்திக் பாண்டியா 2 ரன்னிலும் அக்சர் பட்டேல் 7 ரன்னிலும் அவுட் ஆகினர். மேலும் ரிங்கு சிங் 11 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 202 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் இழந்திருந்தது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து 23 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா ஆரம்பம் முதலே தொடர்ச்சியான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியின் கேப்டன் மார்க்ரம் 8 ரன்னிலும் ஸ்டப்ஸ் 11 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இவர்களைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரிக்கல்டன் 21 ரன்னிலும் அவுட் ஆனார். இவர்களது விக்கெட்டை தொடர்ந்து தென்னாப்பிரிக்க அணியின் அதிரடி ஜோடியான மில்லர் மற்றும் கிலாசன் ஆகியோர் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினர். எனினும் கிலாசன் 25 ரன்னிலும் மில்லர் 18 ரன்னிலும் அவுட் ஆக தென்னாப்பிரிக்க அணி சரிவை நோக்கி நகர தொடங்கியது.

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான வருண் சக்கரவர்த்தி மற்றும் ரவி பிஷ்னாய் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இவர்களது சிறப்பான பந்துவீச்சால் தென்னாப்பிரிக்கா அணி 17.5 ஓவர்களில் 141 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்தப் போட்டி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருக்கிறது. மேலும் டி20 போட்டிகளில் இந்தியா தொடர்ச்சியாக பெரும் பத்தாவது வெற்றி இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles